vanakkam

vvvv

இணையமலர் செய்திகள்

Sunday, February 6, 2011

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்

பிராமணர்களில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை
சங்கீதம், வியாகரணம், அத்வைதம், தத்வம், ...
என்று ஏதாவது ஒரு துறையில் சிறந்தோருக்கு
கலைமகளின் பெயரான பாரதி என்ற சிறப்புப்
பட்டம் உண்டு. உ-ம்: அதிகை உத்தண்ட பாரதி,
மழவை சிதம்பர பாரதி,  சிவகங்கை கவி குஞ்சர பாரதி,
பழைய சிருங்கேரி மடத்தலைவருக்கு
பாரதி, பின்னர் எழுந்த காஞ்சி மடத்துக்கு அதைப்போல்
சரஸ்வதி என்ற பட்டமும் உண்டு. 20-ஆம் நூற்றாண்டில்
ஜாதியை மீறிய பட்டமாக பாரதி உருமாறிய வளர்ச்சியும்
காண்கிறோம்: உ-ம்: சோமசுந்தர பாரதி. ஆனால், உலகறிந்த
பாரதி ஒருவர்தானே. அதுபோல, உலகறிந்த
நாவலர் பெருமான் ஒருவரே. மற்ற நாவலர்கள்
பலர் பேருக்கு இருந்தாலும்.



உத்தர மேரூர்க்குப் பக்கத்தில் உள்ள
திருவதிகைக் கோயில் தெய்வத்தின் மீது
கனிந்த செந்தமிழ்க் கலம்பகம் ஒன்று
பாடியவர் உத்தண்ட வேலாயுத பாரதி.

திருவிளை யாடல் நாடகம் செய்து
கீர்த்தி சேர்த்தவர் கிருட்டிண பாரதி.

படித்தால் பயன்தரக் கூடிய பல்பொருட்
சூடா மணிநிகண் டென்னும் சுவடி
இயற்றித் தந்தவர் ஈசுர பாரதி.

தாய்ப்பால் பருவத்தில் இருந்தே தமிழைப்
பயின்று பயின்று பக்குவப் பட்டு
முயன்று முயன்றுதம் முதுமைப் பருவத்தில்
ஆத்தி சூடிவெண் பாவை அளித்தவர்
இயற்றமிழ்ப் புலவர் இராம பாரதி.

விருத்தங்க ளாலே விசுவ புராணம்
தந்தவர் முத்துச் சாமி பாரதி.

திருத்தொண்டர் மாலை தேசிகர் தோத்திரம்
முதலிய நூல்களின் மூலம் பெரும்புகழ்
கொண்டவர் புதுவை குமார பாரதி

ஊடல் பதிகமோ உதட்டுப் பதிகமாம்
உதட்டுப் பதிகமோ உறவுப் பதிகமாம்
ஊடலால் ஏற்படும் உணர்ச்சியும் உறவும்
பக்தி வழிக்குப் பயன்படா தென்பதால்
கூடல் பதிகம் பாடிக் கொடுத்தவர்
குணங்குடி கொண்ட கோவிந்த பாரதி.

புகழ்மிகு கந்த புராணகீர்த் தனைகளும்
பதமே கெடாத பருவப் பதங்களும்
வேங்கைக் கும்மியும் வேறுபல நூல்களும்
கொடுத்தவர் பெருங்கரை குஞ்சர பாரதி.

வள்ளல்முத் திருளப்ப பிளை அவர்களால்
மதிக்கப் பெற்றவர் மதுரகவி பாரதி.

கீர்த்தனைகள் எழுதிக் கீர்த்தியோடு விளங்கிய
கிழவர் கோபால கிருட்டிண பாரதி.

பேச்சுத் திறத்தால் பெரும்பெரும் பகைவரின்
மூச்சைத் திணறடித்த முத்தமிழ் வித்தகர்
பசுமலை சோம சுந்தர பாரதி.

இத்தனை பாரதிகள் இந்நாட்டில் இருந்தும்
ஒரேஒரு பாரதி உயர்ந்து நிற்கின்றான்.

அவன்யார்? அவன்யார்? அவன்யார் என்றால்
அவன்தான் ஆங்கில ஆட்சிக்குச் சனியன்
குப்புற விழாத சுப்பிர மணியன்!

நித்திரைக் கவிஞர்க்கு மத்தியில் தோன்றிய
முத்திரைக் கவிஞன்! முண்டாசு பாரதி!

பெண்மீதில் ஆசை வைக்காமல் பெருந்தமிழ்
மண்மீதில் ஆசை வைத்த மகாகவி!

பா-ரதம் ஓட்டிய பாரதி! பழைமையைப்
பார்-அதம் செய்கிறேன் என்ற பாரதி!

கட்டுப் படாத கவிஞன்! என்றென்றும்
வெட்டுப் படாத வெற்றிக் குரியவன்.

--சுரதா.



பா-ரதம் ஓட்டிய பாரதி! பழைமையைப்
பார்-அதம் செய்கிறேன் என்ற பாரதி!
- சுரதா வரிகளை மீட்டும் படிக்கும்போது
   நினைவுக்கு வரும் யுனித்தமிழ் நினைவு ஒன்று.

எனக்கொரு பெருமையை கவிஞர் பேரா. அனந்தநாராயணன்
வழங்கினார்கள். அந்த வெண்பா யூனிகோடு
குழுமங்கள் தமிழில் வளர சந்தவசந்தம் யாப்பறி புலமைப்
பெரியோர்கள் முடிவெடுத்து தமிழின் முதல்
யுனிக்கோடு குழுமங்கள் ஆகிய செயலுக்குச்
சான்று. இன்று எல்லா தமிழ்க் குழுமங்களும்
யூனிக்கோடில், 10,000 வலைப்பதிவுகள்.
அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் விட்டிருந்தால்
இன்று சில லட்சம் வலைப்பதிவாவது தமிழ்நாட்டில்
தமிழில் இருந்திருக்கும். எவ்வளவு அரிய
விஞ்ஞானம், கருத்துக்கள், வரலாறு ... தமிழில்
இருந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

  பாரதம் நூலெழுதும் பங்கேற்றார் பண்டையொரு
  வாரணம்; சந்த வசந்தக் கவிஞர்கள்தம்
  பாரதம்செல் பாதை படைக்கக் கணேசனே
  காரணமாய் நின்றார் களித்து!
                                 - பேரா. அனந்தா

No comments:

Post a Comment