vanakkam

vvvv

இணையமலர் செய்திகள்

Monday, February 7, 2011

முன்னோடிகள்: மழவராயனேந்தல் சுப்பராம பாகவதர்

சிவகங்கைமாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், திருப்பாச்சேத்தி  அருகே உள்ள மழவராயனேந்தல் கிராமத்தில் 1888-ம் ஆண்டு பிறந்தார் சுப்பராம பாகவதர். இவரது தந்தை தமிழ் பண்டிதர். தாய்வழிப் பாட்டனார் சிதம்பர பாகவதர் சிறந்த சங்கீத ஞானமும், தமிழ்ப் புலமையும் வாய்ந்தவர்.சுப்பராமன் சங்கீதத்திலும் தமிழிலும் நல்ல பயிற்சி பெற்றார்.

கட்டையான சாரீரம். கடும் பயிற்சி மூலம் அதை பண்படுத்திக் கொண்டார்.பல வித்வான்களிடம் பயின்று சங்கீத ஞானத்தை விருத்தி செய்துகொண்டு சங்கீத சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்றார்.தெலுங்கு, சம்ஸ்கிருதத்தில் உள்ள கீர்த்தனைகளுக்கு சரிசமமாக தமிழிலும் கீர்த்தனைகள் தேவை என்பதை உணர்ந்தார். இதன் விளைவாய் தமிழில் கீர்த்தனைகளையும் பதங்களையும் புனைந்தார்.இசைக் கச்சேரிகள் செய்து பணம் ஈட்ட வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. ராகத்தின் நுணுக்கங்களை அலசி ஆராயும் இசை அறிவு கொண்டவராக இருந்தார்.  தனித்தன்மையுடன் நிரவல் ஸ்வரம் பாடுவார்.இராமநாதபுரம், மைசூர், திருவனந்தபுரம் ஆகிய சமஸ்தானங்களில் பாடி பாராட்டும் பரிசும் பெற்றார்.வித்வான் புஷ்பவனம், காயகசிகாமணி முத்தய்யா பாகவதர் போன்றோரிடம் நட்பு பாராட்டினார். 

கர்நாடக சங்கீதம் தழைத்தோங்க வேண்டும் என்றால் இசைக் கலைஞர்கள் மாதம் ஒருமுறை கூடி அவரவர் மனோதர்மப்படி பாட வேண்டும், மக்கள் அவற்றைக் கட்டணம் இன்றி கேட்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.இவர் பாடும் ராக ஆலாபனங்களையும் ஸ்வரங்களையும் கேட்ட பல வித்வான்கள் இவருடைய இசையினால் உந்தப்பட்டனர். பணம் சம்பாதிப்பதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல் இசை அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவே இசை பயின்றார். 

1943-ம் வருடம் சங்கீத வித்வத் சபைக்குத் தலைமை தாங்கினார்.

தமிழியலாய்வுகள் - வரலாற்றின் மறைவோட்டங்கள்(1) உ.வே.சா-ஒளியும் நிழலும்

பத்தொன்பதாம் நூற்றாண்டு, அறிவுத் துறைகளின் ஒருங்கிணைவுக் காலகட்டம்।தொழிற்புரட்சியின் தொடர் விளைவாய் பிரித்தானிய , போர்த்துகீசிய வரவுகள் இந்தியாவிற்குள் காலனிய வரலாற்றைத் தொடங்கி வைக்கின்றன।அச்சு ஊடகம் தமிழை அதன் சகல பரிமாணங்களிலும் நவீன படுத்திற்று।தொடர் வண்டி என்ற நவீன போக்குவரத்து ஒருங்கிணைப்புடன் உ।வே।சாவின் பதிப்பும் தேடலும் தொடங்குகிறது. குடந்தையில் ஆசிரியர் பணியும் சென்னையில் சீவக சிந்தாமணி பதிப்பும் என்பது ரயில்வண்டியின் வரவு இல்லையேல் சாத்தியமன்று. 1909 இல்தான் உ.வே.சா சென்னை மாநிலக் கல்லூரிக்கு மாற்றலாகி வருகிறார்.

குடந்தையில் உ.வே.சா தங்கியிருந்தபோதே சி.வை.தாமோதரம் பிள்ளை அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று 1887இல் புதுக்கோட்டை சமஸ்த்தான நீதிபதிகளில் ஒருவராக இருந்து, பின்னர் 1885 இல், குடந்தையில் கருப்பூரில் வாழத் தொடங்கினார்.இங்குதான் சி.வை.தா வும் உ.வே.சாவும் கலந்து பழகினர். சீவக சிந்தாமணி பதிப்பு குறித்த மனஸ்த்தாபமும் சிறு பிரிவும் இருவருக்கும் இவ்விடத்தே உண்டானதை உ.வே.சா. வின் ’என் சரித்திரம்’ பகிர்ந்து கொள்ளும் செய்தி. சி.வை .தா. தம்மிடமிருந்து வஞ்சகமாக, சிந்தாமணி ஏடுகளை வாங்கிச் சென்றதாக உ.வே.சா குறிப்பிடுகிறார்.அனால் இந்நிகழ்வு ‘என் சரித்திரத்தில்’ மட்டும்தான், அதாவது சி,வை.தா வுக்கு எதிரான பதிவாக இடம்பெறுகிறது.மற்றைய, அவரின் உரைநடை நூல்கள் மற்றும் முன்னுரைகள் ஆகியவற்றில் சி.வை.தா வுக்கு எதிரான பதிவைக் காண்பது அரிது. இதனால் என் சரித்திரத்தில் சில பகுதிகள் உ.வே.சா வின் ஆத்ம சீடரான கி.வ.ஜா எழுதியிருக்கலாமோ என்ற ஐயத்தை கைலாசபதி, சிவத்தம்பி , ராஜ்கௌதமன் ஆகியோர் எழுப்புகின்றனர்.வையாபுரிப் பிள்ளையும் இதனை முன்பு குறிப்பிட்டுள்ளார்.இந்த ஐயத்தை என் சரித்திரத்தின் பிற்பகுதியிலுள்ள நடை வேறுபாடுகள் வலுப்படுத்துகின்றன.. ( உ.வே.சா )எனினும் இதனை முற்றான முடிவாக எடுத்துக் கொள்வதற்கில்லை।பல பெரும் அளுமைகள் மீது இவ்வாறான சாடல்கள் ஐயங்கள் உண்டு. ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கையிலேயே அவரது மனைவி மிலோவா ஐன்ஸ்டைனின் பங்களிப்பு மறைக்கப்பட்டது என்ற அளவிற்கு கூட விமர்சனங்கள் எழுந்துள்ளன.ஆனால் இந்த ஐயம் எளிதில் புறக்கணிக்கத்தக்கதும் அல்ல.



உ।வே।சா வுக்கு ஏடுகளைப் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை இருந்ததில்லை என்பதை வையாபுரிப் பிள்ளை, உ।வே।சா வின் நினைவு நாள் சொற்பொழிவில் திருவல்லிக்கேணி இலக்கியக் கூட்டத்திலேயே பதிவு செய்துள்ளார்.(தமிழ்ச்சுடர் மணிகள் – 6) உ.வே.சா வின் சீவக சிந்தாமணிப் பதிப்பு நடந்தேறியவுடன் அதிலுள்ள பிழைகளைக் கண்டறிந்த வித்வான்களில் வையாபுரிப் பிள்ளை முதன்மையானவர்.. இவரின் சிந்தாமணிப் பதிப்பு, - சைவ சமாஜப் பதிப்பாக- 1941- இல் வெளியானது.அதில் உ.வே.சா வின் பதிப்பில் காணப்பட்ட பிழைகளைத் தொகுத்து அதன் முன்னுரையில் விரிவாகப் பேசியுள்ளார்.உ.வே.சா வின் சிந்தாமணிப் பதிப்புக்கு எதிராக வெளியான மற்றொரு கண்டன நூல் இலங்கையில் இருந்து வந்தது.
பொன்னம்பல தேசிகர் என்னும் தமிழ்ப் புலவர் வெளியிட்ட ‘ ஸீமத். வே. சாமிநாதைய்யரவர்கள் பதிப்பித்த சீவகசிந்தாமணி உரைப் பிழைகள்’ என்பதே அந்நூலாகும்.1887 இல் முதல் பதிப்பும் 1907 இல் இரண்டாம் பதிப்பும் வெளிவந்தது. முதல் பதிப்பில் அச்சிடப்பட்ட ஐநூறு பிரதிகள் அச்சுக் கூடத்திலேயே வீணாயின என்பது அன்றைய தொழில் நுட்ப பலவீனத்தை குறிக்கிறது.
உ।வே।சா சிந்தாமணிப் பதிப்பை செய்து வருகையில் சமண சமய விளக்கங்கள் வேண்டி சமண நண்பர்களை நாடிச் சென்றார்। அதில் சந்திரநாத செட்டியாரின் உதவியுடன் திண்டிவனம் வீடூர் கிராமத்தில் அப்பசாமி நயினார் என்பவரை அணுகி பல விளக்கங்களைப் பெற்றுள்ளார்। இவர், குடந்தை அரசுக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய, இந்திய அளவில் அறியப்பட்ட புகழ்பூத்த சமண அறிஞர் அ।சக்கரவர்த்தி நயினாரின் தந்தை ஆவார்।
அ.சக்கரவத்தி நயினாரின் நீலகேசி பதிப்பு சமய – திவாகர வாமன முனிவரின் உரையுடன் 1936 இல் வெளியாயிற்று.இதில் சக்கரவத்தி நயினாரின் சமண சமயம் குறித்த முன்னுரை ஆங்கிலத்தில் ஏறத்தாழ 300 பக்கங்களுக்கும் மேலாக விரிந்து செல்கிறது, தமிழ்ச் சமண மரபை சைவ நூல்வழியே அறிந்து வரும் ஒரு தமிழ் மாணவன் இத்தகைய மாற்று மரபை அதன் சொந்த களத்தில் எதிர் நோக்குதல் ஒரு புதிய புரிதலை வழங்கக் கூடியதாகும்.

இத்தகைய சமண நண்பர்களின் வழிகாட்டுதலை உ.வே.சா வுக்கு குடந்தை அரசுக் கல்லூரி சூழல் வழங்கியது. உ.வே.சா , பதிப்பியலில் முன்னோடித் தன்மையும் மாற்று சமயங்கள் மேல் காழ்ப்புணர்வற்ற நோக்கும் கொண்டிருந்த போதிலும் அன்றைய சுதந்திர போராட்டம் முன்னிட்ட தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு எழுச்சிகள் மிகுந்த சமூக அசைவியக்கத்திலிருந்தும் சரித்திரப் போக்கிலிலிருந்தும் உ.வே.சா விலகியே நின்றார்.
(சி.வை,தா)

வ.வு.சி, சிறையில் இருந்தபடியே திருக்குறளுக்கு உரை எழுத முற்பட்ட போது ஏற்பட்ட ஐய்யங்களை தீர்த்துக்கொள்ள உ.வே.சா வுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். உ.வே.சா , அதற்குத் தான் பதிலளித்தால் பிரிட்டிஷ் அரசோடு முரண்பட நேரிடுமோ என்றஞ்சி மாநிலக் கல்லூரியின் ஆங்கிலேய முதல்வரிடம் ஆலோசனைப் பெற்ற செய்தியை உ.வே.சா வின் உரைநடைப் பகுதி ஒன்றிலேயே காணலாம்.. இத்தகைய ஒரு சமூகப் பிரக்ஞையுடந்தான் உ.வே.சா செயல்பட்டுள்ளார்.
19 ஆம் நூற்றாண்டு மடங்களின் கல்விச் சூழல், சைவ மடங்களுக்கு இடையேயான பிணக்குகள், அன்றைய தமிழ் இலக்கிய-அரசியல் போக்குகள் ஆகியவற்றை கூர்ந்து அறிய உ.வே.சா வின் உரை நடை நூல்கள் மிக முதன்மையான தரவுகளாகும். இவற்றுக்குள் ஊடாடும் நுண் அரசியல் தளங்களை அறிய முற்படும் முதற் படியாக இக்கட்டுரை அமைகிறது
கூர்ந்து அவதானித்தால் சபாபதி நாவலரின் ‘திராவிட பிரகாசிகை’ என்ற நூல்தான் தமிழ் இலக்கிய வரலாற்று முன்னோடி நூல் எனலாம். இந்நூல் பற்றி தமிழில் அதிகம் பேசப்படவில்லை. பேரா.சிவத்தம்பி மட்டுமே தனது ‘ தமிழில் இலக்கிய வரலாறு ‘ எனும் நூலில் போகிற போக்கில் சுட்டிச் செல்கிறார். இது குறித்த விவாத்த்திற்கு இனி அடுத்த தொடரில் வருவோம்.

நவீன கல்வி உருவாக்கத்திற்கான பாட நூல்களாக தமிழிலக்கியத்தை அச்சேற்றம் செய்த தமிழறிஞர்கள், அதை எதிர்த்து எழுதிய தியாகராஜ செட்டியார் போன்ற குடந்தைத் தமிழ்ப் பேராசிரியர்கள் , ஆறுமுக நாவலரைத் தொடர்ந்து தமிழ் நூல் பதிப்பில் இயங்கிய சி.வை.தா , சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சார்ந்த மழவை மகாலிங்க ஐயர் போன்றோரின் தொல்காப்பிய பதிப்புகள் , ரா.ராகவையங்கார் தலைமையில் வெளியான ‘ செந்தமிழ்’ இதழில் வந்த ஆராய்ச்சி கட்டுரைகள் - என 19 ஆம் , 20 ஆம் நூற்றாண்டு அறிவுப் புலம் பல்வேறு சுவாரசியங்களை உள்ளடக்கியிருக்கிறது.அது வரலாற்றின் மறைவோட்டங்கள் பலவற்றை நமக்குச் சொல்கிறது.

குறுந்தொகைப் பதிப்புக்கள்

குறுந்தொகைக்கு இதுகாறும் வெளிவந்துள்ள பதிப்புக்களின் தோற்றம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதை அறிமுகம் செய்யும் பகுதி இது. பிற நூல்களுக்கும் இது தொடரலாம்.
குறுந்தொகை – தி.சௌ. அரங்கனார் உரைப்பதிப்பு (1915) – தலைப்புப் பக்கம் (அரங்கனாரின் சொந்தப் பதிப்பு - முதற்பதிப்பு)

குறுந்தொகை – தி.சௌ. அரங்கனார் உரைப்பதிப்பு (2000) – முன்னட்டை (முல்லை நிலையப் பதிப்பு - முதற்பதிப்பு)

குறுந்தொகை – தி.சௌ. அரங்கனார் உரைப்பதிப்பு (2008) – முன்னட்டை (முல்லை நிலையப் பதிப்பு – 2ஆம் பதிப்பு)

குறுந்தொகை – உ.வே.சா. உரைப்பதிப்பு (1937) - தலைப்புப் பக்கம் (உ.வே.சா.வின் சொந்தப் பதிப்பு – முதற்பதிப்பு)

குறுந்தொகை – உ.வே.சா. உரைப்பதிப்பு (1983) – முன்னட்டை (அண்ணாமலைப் பல்கலைப் பதிப்பு – முதற்பதிப்பு)

தொல்காப்பியத்தின் முதற்பதிப்பு


மழவை மகாலிங்கையர் 1847 –லில் வெளியிட்ட தமிழின் மணிமுடியாகிய தொல்காப்பியத்தின் முதற்பதிப்பின் தலைப்புப் பக்கத்தின் தோற்றம். தொல்காப்பியப் பகுதிகளுள் முதன்முறை அச்சேறிய பெருமை எழுத்ததிகாரத்தின் நச்சினார்க்கினியர் உரைக்குரியதாகும்.

செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த தண்டமிழ்த் தாமோதரனார்

எம்.கே.ஈழவேந்தன் எம்.பி.

செல்லரித்து சீரழிய இருந்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் பலர். அவர்களுள் மூவர் எம் நினைவில் நிற்கின்றனர். இதனைத் தமிழ்த் தென்றல் திரு.வி.க.தனது "வாழ்கைக் குறிப்புக்கள்" என்ற நூலில் தனக்கே உரிய தனிநடையில் இம்மூவரின் பெருமையை முறையே சாற்றிச் செல்கின்றார். இதோ அவர் செப்பியவை. "பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்கு கால் கொண்டவர் ஆறுமுகநாவலர். சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை, கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சுவாமிநாத ஐயர்" இவ்விதம் திரு.வி.க.வைவிட வேறு யார் தமிழ் அறிஞர் ஆற்றிய பணியினை அழகுற ஆணித்தரமாக எடுத்துரைக்க முடியும்.

தமிழக அறிஞர்கள் மறைந்தபோது ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் எடுத்தியம்பிய இரங்கல் உரைகள் நிறைய உள்ளன, ஆனால், ஈழத்து அறிஞர்கள் மறைந்தபோது அதே துடிப்புடன் தம் துயரைத் தெரிவித்த தமிழக அறிஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனினும் புறநடையாக - விதிவிலக்காக நம் தாமோதரனார் மறைந்தபோது அவரின் அளவிடற்கரிய பெருமையை புகழ் படைத்த பரிதிமாற் கலைஞர் தமது உள்ளத்தில் எழுந்த துயர் உணர்வினை காலத்தாற் சாகாது ஞாலத்தில் நிலைத்து நிற்கின்ற முறையில் உள்ளம் உருகும் பாடலாக பின்வரும் முறையில் துயர் பெருக்கெடுக்கப் பாடியுள்ளார்.

"காமோதி வண்டுதேன் கடிமலர் கூட்டுதல்போல்

நாமோது செந்தமிழில் நன்னூல் பதிப்பித்த

தாமோ தரம்பிள்ளைச் சால்பெடுத்துச் சாற்றவெவர்

தாமோ தரமுடை யார்"

வேறு சொற்களில் விளம்பின், தாமோதரனாரின் தரம் உணர்ந்தவர்கள் தான் அவரின் பெருமையை எடுத்துரைக்க முடியும் என்பது இப்பாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஈழத்தின் ஓர் அங்கமாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் தலைநகராம் நல்லூரில் 05.12.1822 இல் ஆறுமுகநாவலர் பிறக்க 10 ஆண்டுகள் கழித்து சிறுப்பிட்டி என்னும் சிற்றூரில் 12.09.1832 இல் வைரவநாதன் பெருந்தேவி ஆகியோருக்கு தாமோதரனார் மகனாகப் பிறந்தார். தமிழ் இன எண்ணிக்கையில் ஏற்றத்தில் அக்கறை கொண்டிருந்த இவரின் தந்தையார் எட்டுக் குழுந்தைகளைப் பெற்றார். அவர்களுள் மூத்தவர் நம் தாமோதரனார். தந்தை ஆசிரியராக இருந்ததனால் தந்தையின் அறிவு இவரின் வளர்ச்சிக்குத் துணை நின்றது. அத்தோடு இவரின் மேல்நிலைக் கல்வி மேம்பட சுன்னாகத்து முத்துக்குமார நாவலர் தூண்டுகோலாக விளங்கினார். தமிழ்க் கல்வியில் ஊன்றிக் கவனம் செலுத்திய இவர் 1844 - 1852 வரையான காலப்பகுதியில் தெல்லிப்பழை மிஷன் பாடசாலை, வட்டுக்கோட்டை கல்வி நிலையம் ஆகியவற்றில் பயின்றதோடு, யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கிலத்தில் ஆழமான அறிவைப் பெற்றார்.

தனது இருபதாம் அகவையில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக விளங்கிய இவர் 1856 இல் `பெர்சிவல்' பாதிரியார் சென்னையில் நடத்திய "தினவர்த்தமானி" இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் சென்னை வாழ்வு 1856 இல் தொடங்க 1857 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் தமது ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். இம்மாநிலக் கல்லூரியில் தான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதஐயரும் சில காலம் ஆசிரியப் பணி புரிந்ததை இங்கு நினைவு கொள்வோமாக. இக்கல்லூரியின் முன்றிலில் உ.வே.சாமிநாதஐயரின் சிலை அவரின் பெருமை பேசும் முறையில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. இச்சென்னை மாநிலக் கல்லூரியில் இலங்கை அரசியலில் அரை நூற்றாண்டு அரசோச்சிய சேர் பொன்.இராமநாதன் இங்கு பயின்றவர் என்பது இங்கு பெருமையுடன் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அமைதி காண மிக நெருக்கடியான காலகட்டத்தில் பெரும் பணி ஆற்றிய ஜி.பார்த்தசாரதி அவர்களும் இங்கேயே பயின்றார். இவருடன் பயின்றவர் இலங்கையின் கல்வித்துறை இயக்குனராக விளங்கிய திருமதி இரத்தினா நவரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி இரத்தினா நவரத்தினம் பல நூல்களை எழுதியதோடு "திருவாசகத்துக்கு" அழகிய ஆங்கில உரை வழங்கியதோடு யோகர்சுவாமிகளின் புகழையும் ஏற்றமிகு ஆங்கில நடையில் ஒரு நூல் வரைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் சிக்கலை ஒட்டி பார்த்தசாரதியை நான் அடிக்கடி சந்தித்த போது திருமதி இரத்தினா நவரத்தினத்தின் நலன் பற்றி விசாரிக்க அவர் தவறியதில்லை. இவ்வினிய செய்தியை திருமதி இரத்தினா நவரத்தினத்துக்கு நான் சொல்லியபோது நன்றி மறவா நண்பர் எம் பார்த்தசாரதி என்று கூறி உவகையுற்றார்.

எம் பணியையும் உணர்ந்திருந்த நம் இரத்தினா நவரத்தினம் `ஙுணித ச்ணூஞு ச் –ச்ண ணிஞூ ஐஞீஞுச்ண் ச்ணஞீ ஐஞீஞுச்டூண்" (உங்களிடம் எண்ணங்கள் உண்டு. அந்த எண்ணங்களில் ஏற்றமும் உண்டு) என்று எம்மை ஏற்றிப் போற்றியதையும் இங்கு நினைவு கூர்ந்து உவகையுறுகிறேன்.

தமிழகத்தில் தாமோதரனாரின் பல்துறை பணி

12.09.1832 இல் தமிழீழத்தில் தோன்றிய தாமோதரனார் தமிழகம் சென்று மாநிலக் கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தின், முதல் இளங்கலை (ஆ.அ.) பட்டதாரியானார். தாமோதரனாருடைய நிழற்படம் சென்னை பல்கலைக்கழகத்து நூலகத்தில் தனிச்சிறப்புடன் பேணிக் காக்கப்படுகிறது. அவரது நினைவுக் கூட்டங்களின்போது இவ்வோவியத்திற்கு மலர்மாலை சூட்டி சிறப்புச் செய்யப்படுகிறது. சென்னை மாநிலக் கல்லூரியில் இருந்து கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரிக்கு மாற்றம் பெற்றுச் சென்ற இவர் தனது 39 ஆவது அகவையில் 1871 இல் இளங்கலைச் சட்டம் (ஆ.ஃ.) பட்டம் பெற்றார். அரை நூற்றாண்டை இவர் எய்கையில் 1882 இல் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்பு 1884 இல், சட்டத்துறையில் இவர் பெற்றிருந்த சிறப்புக் காரணமாக புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவராக பணியாற்றும்படி இவருக்கு அழைப்புக் கிடைத்தது. 1890 இல் இப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு 1895 இல் `ராவ் பகதூர்' பட்டம் வழங்கப்பட்டது. தமிழீழத்தில் தோன்றிய இவர் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் உள்ள புரசைவாக்கம் என்ற பகுதியில் தனது அறுபத்தொன்பதாவது அகவையின் தொடக்கத்தில் 1901 ஆண்டு ஜனவரி முதலாம் நாள் இறையருளில் இரண்டறக் கலந்தார்.

நம் சி.வை.தாமோதரனார் ஆற்றிய பணிகள் பல. ஆனால், அவருக்கு அழியாப் புகழைத் தந்து நிற்பது அவர் பதிப்பித்த நூல்களாகும். "தமிழீழம் தந்த தாமோதரனார்" என்ற தலைப்பில் சென்னை கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கும் முனைவர் (டாக்டர்) கு.அரசேந்திரன் தாமோதரனார் தான் வரைந்துள்ள நூலில் பதிப்பித்த நூல்களை பின்வரும் முறையில் ஆண்டடிப்படையில் தந்திருப்பது எமக்கு அகமகிழ்வினைத் தருவதோடு, அவரின் ஆய்வுள்ளத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

1. நீதிநெறி விளக்கம் 1854

2. தொல் சேனாவரையம் 1868

3. வீரசோழியம்

பெருந்தேவனார்

உரையுடன் 1881

4. இறையனார் களவியல் 1883

5. தணிகைப் புராணம் 1883

6. தொல் பொருள்

நச்சினாக்கினியம் 1885

7. கலித்தொகை 1887

8. இலக்கண விளக்கம் 1889

9. சூளாமணி 1889

10. தொல் எழுத்து 1891

11. தொல் - சொல் (நச்) 1892

மேற்குறித்தவற்றை வெளியிட்ட தாமோதரனார் 1898 இல் அகநானூற்றை வெளியிட எடுத்த முயற்சியும் அவர் வரலாற்றிலிருந்து அறியத்தக்கதாக இருக்கிறது. சொற்பிறப்பு ஆய்வாளர் முனைவர் கு.அரசேந்திரன் கூற்றுப்படி "பதினொரு நூல்களில் மகாலிங்க ஐயர் பதிப்புத் தவிர பிற அனைத்தும் அவரால் மட்டுமே முதன்முதலாக அச்சேற்றப்பட்டன என்பதை நாம் நினைக்க வேண்டும்" என்று வலியுறுத்திச் செல்லும் கூற்று தாமோதரனாரின் தலைசிறந்த பதிப்புப் பணிக்குச் சான்று பகர்கிறது.

"தமிழீழம் தந்த தாமோதரனார்" பற்றி முனைவர் கு.அரசேந்திரன் வரைந்துள்ள நூல் குறள் போல் குறுகிய வடிவம் கொண்டிருப்பினும் இதுவரை தாமோதரனார் பற்றி ஏனைய அறிஞர்கள் குறிப்பிடாத பல அரிய குறிப்புகளை இதனில் தந்துள்ளதனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிஞர் முனைவர் க.ப.அறவாணன் "திருக்குறளில்" கரைகண்ட பேராசிரியர் இளங்குமரன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக மேலாளர் முத்துக் குமாரசாமி உட்பட பல அறிஞர்கள் இந்நூலை உகந்து போற்றியுள்ளதனால்

"தமிழைக் கொண்டு உண்மையை

வாழ வைக்கும் அறம்

உண்மையைக் கொண்டு தமிழை

வாழவைக்கும் திறம்....

இவர்தான் அரசேந்திரன்"

என்று ஆய்வாளர் அரசேந்திரனை உச்சி மீது வைத்து உவந்து போற்றும் நம் கவிஞர் காசி. ஆனந்தன் மேலும் ஒரு படி சென்று,

"சூழ்ச்சியாளர் பொய்யும் புரட்டும்

களைந்து - வளைவுற்ற தமிழும்

தமிழ் மண்ணும் நிமிர்த்தும்

உயிர்ப்புள்ள ஆய்வும் எழுத்தும்

இவர்"

என்ற வரிகள் ஊடாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட நம் தாமோதரனாரின் பல வியத்தகு பணிகளை மக்கள் முன் அரசேந்திரன் நிறுத்தியுள்ளார் என்பதை நம் கவிஞர் நிலை நாட்டியுள்ளார்.

தன் பணி பற்றித் தாமோதரனார்

தன் வாழ் நாள் முழுவதையுமே பதிப்புத் துறைக்கு அர்ப்பணித்த நம் தாமோதரானார், தாம் ஏன் இப்பதிப்புத்துறையில் மூழ்கித் திளைத்தார் என்பதையும் பின்வரும் சொற்களில் எடுத்துக் காட்டுகிறார். இச் சொற்கள் அவர் உள்ளம் உருகி வெளியிட்ட சொற்களாகக் காட்சியளிக்கின்றன. இதோ அவர் மொழிந்தவை.

"நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதிகளுக்கு வந்த கதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்க மாட்டாமை ஒன்றே என்னை இத் தொழிலில் வலிப்பது"

"பல பெரும் வித்துவான்கள் இந் நூலை (தொல்காப்பியத்தை) அச்சிட விரும்பியதும் முயன்றதும் இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்டதும் தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான இதனை அச்சிடின் தம் பெயர்க்குக் குறைவு நேரிடுமென்று தம் முயற்சியைக் கைவிட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன். ஆதலால் பண்டிதர், கவிராஜ பண்டிதர், மகாவித்துவான், புலவர் என்றின்ன பெரும்பட்ட சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந் தமிழ் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என் போலியரே இதில் கையிடுவது பேரவசியமாயிற்று"

கற்றோர் ஏற்றும் கலித்தொகை

தாமோதரனார் பதிப்பித்த பல நூல்களில் அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது அவரின் "கற்றோர் ஏற்றுங் கலித்தொகை"ப் பதிப்பேயாகும். அவரின் 59 ஆவது அகவையில் 1887 இல் இந்நூல் பதிக்கப்பட்டது. தனது அகவை 22 இல் 1854 இல் நீதிநெறி விளக்கத்தை தனது முதல் நூலாக வெளியிட்டவரும் இவரே, கலித்தொகைச் சுவடியை தான் பதிப்பிக்க முனைந்த போது தனக்கு ஏற்பட்ட தொல்லைகளை பின்வருமாறு அவர் நெஞ்சம் நெகிழ உரைக்கிறார். கலித்தொகைப் பிரதிகள் தேடயான் பெற்ற கட்டம் வாயினாற் கூறும் அளவைத்தன்று. முதன்முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது மூல பாடப்பிரதி, அது தலையுங் கடையுமின்றிய குறைப் பிரதி, மேலும் பெரும்பாலும் எழுத்துகள் சிதைந்து ஒரு பாட்டின் சேருறுப்பாவது முற்றும் வாசிக்க முடியாமற் கிடந்ததாற் படிப்பதற்கே வெறுப்புண்டாய் நீக்கிவிட்டேன். "பின்னர்த் தொல்காப்பியப் பரிசோதனைக்காக தேடிய போது ஷ்ரீலஷ்ரீ ஆறு முகநாவலரின் பிரதி அகப்பட்டது. அது கொண்டு கலித்தொகை அருமை உணர்ந்து அது எப்படியும் உலகிற்குப் பயன்பட வேண்டும் என்னும் அவாவுற்று பல ஆதீனங்களுக்கு விண்ணப்பம் செய்த போது தனக்குத் திருவாவடுதுறை ஆதீனம் துணை நின்றது" என்று கூறி ஆறுதலடைகிறார்.

இவை அனைத்தையும் நினைவில் வைத்துத் தான் தாமோதரனாரை மதிப்பிடுகின்றபோது முனைவர் அரசேந்திரன் தாமோதரனாருடைய பெருமையை ஆய்வுள்ளத்தோடு இவ்விதம் மொழிகிறார். "சமயப்பற்று மிகுந்தவரே நம் தாமோதரன். என்றாலும் தமிழின், தமிழரின் தனிப் பெரும் மாண்புகளைச் சமஸ்கிருதம் விரவாத தனித் தமிழ் நூல்களாகப் பழந்தமிழ் நூல்களே இருந்தபடியால் அவற்றை மீட்டலே தமிழுக்கும் தமிழருக்கும் செய்யும் அடிப்படைப் பணிகளின் முதன்மை என்று கருதியிருக்கின்றார். முனைவரின் இக்கூற்றை வரவேற்று நாமும் வழிமொழி கூறும் நிலையிலிருக்கிறோம்.

தமிழ் அறிஞர்களை மதிப்பீடு செய்து அவர்களுக்கு உரிய இடம் வழங்குவதில் தமிழ் ஆய்வாளர் வையாபுரிப்பிள்ளைக்கு தனிச் சிறப்புண்டு. அவர் தனது "தமிழ்ச்சுடர் மணிகள்" என்ற நூலில் தாமோதரனார் பற்றி வழங்கியுள்ள மதிப்பீடு அவர் நடுநிலை நின்றே தாமோதரனாரை மதிப்பீடு செய்துள்ளார் என்பதற்கு சான்று கூறுகிறது. "ஷ்ரீ ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்து விட்டார்கள். வித்துவான் தாண்டவராசெல்லரித்து சீரழிய இருந்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் பலர். அவர்களுள் மூவர் எம் நினைவில் நிற்கின்றனர். இதனைத் தமிழ்த் தென்றல் திரு.வி.க.தனது "வாழ்கைக் குறிப்புக்கள்" என்ற நூலில் தனக்கே உரிய தனிநடையில் இம்மூவரின் பெருமையை முறையே சாற்றிச் செல்கின்றார். இதோ அவர் செப்பியவை. "பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்கு கால் கொண்டவர் ஆறுமுகநாவலர். சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை, கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சுவாமிநாத ஐயர்" இவ்விதம் திரு.வி.க.வைவிட வேறு யார் தமிழ் அறிஞர் ஆற்றிய பணியினை அழகுற ஆணித்தரமாக எடுத்துரைக்க முடியும்.

தமிழக அறிஞர்கள் மறைந்தபோது ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் எடுத்தியம்பிய இரங்கல் உரைகள் நிறைய உள்ளன, ஆனால், ஈழத்து அறிஞர்கள் மறைந்தபோது அதே துடிப்புடன் தம் துயரைத் தெரிவித்த தமிழக அறிஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனினும் புறநடையாக - விதிவிலக்காக நம் தாமோதரனார் மறைந்தபோது அவரின் அளவிடற்கரிய பெருமையை புகழ் படைத்த பரிதிமாற் கலைஞர் தமது உள்ளத்தில் எழுந்த துயர் உணர்வினை காலத்தாற் சாகாது ஞாலத்தில் நிலைத்து நிற்கின்ற முறையில் உள்ளம் உருகும் பாடலாக பின்வரும் முறையில் துயர் பெருக்கெடுக்கப் பாடியுள்ளார்.

"காமோதி வண்டுதேன் கடிமலர் கூட்டுதல்போல்

நாமோது செந்தமிழில் நன்னூல் பதிப்பித்த

தாமோ தரம்பிள்ளைச் சால்பெடுத்துச் சாற்றவெவர்

தாமோ தரமுடை யார்"

வேறு சொற்களில் விளம்பின், தாமோதரனாரின் தரம் உணர்ந்தவர்கள் தான் அவரின் பெருமையை எடுத்துரைக்க முடியும் என்பது இப்பாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஈழத்தின் ஓர் அங்கமாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் தலைநகராம் நல்லூரில் 05.12.1822 இல் ஆறுமுகநாவலர் பிறக்க 10 ஆண்டுகள் கழித்து சிறுப்பிட்டி என்னும் சிற்றூரில் 12.09.1832 இல் வைரவநாதன் பெருந்தேவி ஆகியோருக்கு தாமோதரனார் மகனாகப் பிறந்தார். தமிழ் இன எண்ணிக்கையில் ஏற்றத்தில் அக்கறை கொண்டிருந்த இவரின் தந்தையார் எட்டுக் குழுந்தைகளைப் பெற்றார். அவர்களுள் மூத்தவர் நம் தாமோதரனார். தந்தை ஆசிரியராக இருந்ததனால் தந்தையின் அறிவு இவரின் வளர்ச்சிக்குத் துணை நின்றது. அத்தோடு இவரின் மேல்நிலைக் கல்வி மேம்பட சுன்னாகத்து முத்துக்குமார நாவலர் தூண்டுகோலாக விளங்கினார். தமிழ்க் கல்வியில் ஊன்றிக் கவனம் செலுத்திய இவர் 1844 - 1852 வரையான காலப்பகுதியில் தெல்லிப்பழை மிஷன் பாடசாலை, வட்டுக்கோட்டை கல்வி நிலையம் ஆகியவற்றில் பயின்றதோடு, யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கிலத்தில் ஆழமான அறிவைப் பெற்றார்.

தனது இருபதாம் அகவையில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக விளங்கிய இவர் 1856 இல் `பெர்சிவல்' பாதிரியார் சென்னையில் நடத்திய "தினவர்த்தமானி" இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் சென்னை வாழ்வு 1856 இல் தொடங்க 1857 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் தமது ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். இம்மாநிலக் கல்லூரியில் தான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதஐயரும் சில காலம் ஆசிரியப் பணி புரிந்ததை இங்கு நினைவு கொள்வோமாக. இக்கல்லூரியின் முன்றிலில் உ.வே.சாமிநாதஐயரின் சிலை அவரின் பெருமை பேசும் முறையில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. இச்சென்னை மாநிலக் கல்லூரியில் இலங்கை அரசியலில் அரை நூற்றாண்டு அரசோச்சிய சேர் பொன்.இராமநாதன் இங்கு பயின்றவர் என்பது இங்கு பெருமையுடன் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அமைதி காண மிக நெருக்கடியான காலகட்டத்தில் பெரும் பணி ஆற்றிய ஜி.பார்த்தசாரதி அவர்களும் இங்கேயே பயின்றார். இவருடன் பயின்றவர் இலங்கையின் கல்வித்துறை இயக்குனராக விளங்கிய திருமதி இரத்தினா நவரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி இரத்தினா நவரத்தினம் பல நூல்களை எழுதியதோடு "திருவாசகத்துக்கு" அழகிய ஆங்கில உரை வழங்கியதோடு யோகர்சுவாமிகளின் புகழையும் ஏற்றமிகு ஆங்கில நடையில் ஒரு நூல் வரைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் சிக்கலை ஒட்டி பார்த்தசாரதியை நான் அடிக்கடி சந்தித்த போது திருமதி இரத்தினா நவரத்தினத்தின் நலன் பற்றி விசாரிக்க அவர் தவறியதில்லை. இவ்வினிய செய்தியை திருமதி இரத்தினா நவரத்தினத்துக்கு நான் சொல்லியபோது நன்றி மறவா நண்பர் எம் பார்த்தசாரதி என்று கூறி உவகையுற்றார்.

எம் பணியையும் உணர்ந்திருந்த நம் இரத்தினா நவரத்தினம் `ஙுணித ச்ணூஞு ச் –ச்ண ணிஞூ ஐஞீஞுச்ண் ச்ணஞீ ஐஞீஞுச்டூண்" (உங்களிடம் எண்ணங்கள் உண்டு. அந்த எண்ணங்களில் ஏற்றமும் உண்டு) என்று எம்மை ஏற்றிப் போற்றியதையும் இங்கு நினைவு கூர்ந்து உவகையுறுகிறேன்.

தமிழகத்தில் தாமோதரனாரின் பல்துறை பணி

12.09.1832 இல் தமிழீழத்தில் தோன்றிய தாமோதரனார் தமிழகம் சென்று மாநிலக் கல்லூரியில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தின், முதல் இளங்கலை (ஆ.அ.) பட்டதாரியானார். தாமோதரனாருடைய நிழற்படம் சென்னை பல்கலைக்கழகத்து நூலகத்தில் தனிச்சிறப்புடன் பேணிக் காக்கப்படுகிறது. அவரது நினைவுக் கூட்டங்களின்போது இவ்வோவியத்திற்கு மலர்மாலை சூட்டி சிறப்புச் செய்யப்படுகிறது. சென்னை மாநிலக் கல்லூரியில் இருந்து கள்ளிக்கோட்டை அரசினர் கல்லூரிக்கு மாற்றம் பெற்றுச் சென்ற இவர் தனது 39 ஆவது அகவையில் 1871 இல் இளங்கலைச் சட்டம் (ஆ.ஃ.) பட்டம் பெற்றார். அரை நூற்றாண்டை இவர் எய்கையில் 1882 இல் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்பு 1884 இல், சட்டத்துறையில் இவர் பெற்றிருந்த சிறப்புக் காரணமாக புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவராக பணியாற்றும்படி இவருக்கு அழைப்புக் கிடைத்தது. 1890 இல் இப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவருக்கு 1895 இல் `ராவ் பகதூர்' பட்டம் வழங்கப்பட்டது. தமிழீழத்தில் தோன்றிய இவர் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் உள்ள புரசைவாக்கம் என்ற பகுதியில் தனது அறுபத்தொன்பதாவது அகவையின் தொடக்கத்தில் 1901 ஆண்டு ஜனவரி முதலாம் நாள் இறையருளில் இரண்டறக் கலந்தார்.

நம் சி.வை.தாமோதரனார் ஆற்றிய பணிகள் பல. ஆனால், அவருக்கு அழியாப் புகழைத் தந்து நிற்பது அவர் பதிப்பித்த நூல்களாகும். "தமிழீழம் தந்த தாமோதரனார்" என்ற தலைப்பில் சென்னை கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கும் முனைவர் (டாக்டர்) கு.அரசேந்திரன் தாமோதரனார் தான் வரைந்துள்ள நூலில் பதிப்பித்த நூல்களை பின்வரும் முறையில் ஆண்டடிப்படையில் தந்திருப்பது எமக்கு அகமகிழ்வினைத் தருவதோடு, அவரின் ஆய்வுள்ளத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

1. நீதிநெறி விளக்கம் 1854

2. தொல் சேனாவரையம் 1868

3. வீரசோழியம்

பெருந்தேவனார்

உரையுடன் 1881

4. இறையனார் களவியல் 1883

5. தணிகைப் புராணம் 1883

6. தொல் பொருள்

நச்சினாக்கினியம் 1885

7. கலித்தொகை 1887

8. இலக்கண விளக்கம் 1889

9. சூளாமணி 1889

10. தொல் எழுத்து 1891

11. தொல் - சொல் (நச்) 1892

மேற்குறித்தவற்றை வெளியிட்ட தாமோதரனார் 1898 இல் அகநானூற்றை வெளியிட எடுத்த முயற்சியும் அவர் வரலாற்றிலிருந்து அறியத்தக்கதாக இருக்கிறது. சொற்பிறப்பு ஆய்வாளர் முனைவர் கு.அரசேந்திரன் கூற்றுப்படி "பதினொரு நூல்களில் மகாலிங்க ஐயர் பதிப்புத் தவிர பிற அனைத்தும் அவரால் மட்டுமே முதன்முதலாக அச்சேற்றப்பட்டன என்பதை நாம் நினைக்க வேண்டும்" என்று வலியுறுத்திச் செல்லும் கூற்று தாமோதரனாரின் தலைசிறந்த பதிப்புப் பணிக்குச் சான்று பகர்கிறது.

"தமிழீழம் தந்த தாமோதரனார்" பற்றி முனைவர் கு.அரசேந்திரன் வரைந்துள்ள நூல் குறள் போல் குறுகிய வடிவம் கொண்டிருப்பினும் இதுவரை தாமோதரனார் பற்றி ஏனைய அறிஞர்கள் குறிப்பிடாத பல அரிய குறிப்புகளை இதனில் தந்துள்ளதனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிஞர் முனைவர் க.ப.அறவாணன் "திருக்குறளில்" கரைகண்ட பேராசிரியர் இளங்குமரன், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக மேலாளர் முத்துக் குமாரசாமி உட்பட பல அறிஞர்கள் இந்நூலை உகந்து போற்றியுள்ளதனால்

"தமிழைக் கொண்டு உண்மையை

வாழ வைக்கும் அறம்

உண்மையைக் கொண்டு தமிழை

வாழவைக்கும் திறம்....

இவர்தான் அரசேந்திரன்"

என்று ஆய்வாளர் அரசேந்திரனை உச்சி மீது வைத்து உவந்து போற்றும் நம் கவிஞர் காசி. ஆனந்தன் மேலும் ஒரு படி சென்று,

"சூழ்ச்சியாளர் பொய்யும் புரட்டும்

களைந்து - வளைவுற்ற தமிழும்

தமிழ் மண்ணும் நிமிர்த்தும்

உயிர்ப்புள்ள ஆய்வும் எழுத்தும்

இவர்"

என்ற வரிகள் ஊடாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட நம் தாமோதரனாரின் பல வியத்தகு பணிகளை மக்கள் முன் அரசேந்திரன் நிறுத்தியுள்ளார் என்பதை நம் கவிஞர் நிலை நாட்டியுள்ளார்.

தன் பணி பற்றித் தாமோதரனார்

தன் வாழ் நாள் முழுவதையுமே பதிப்புத் துறைக்கு அர்ப்பணித்த நம் தாமோதரானார், தாம் ஏன் இப்பதிப்புத்துறையில் மூழ்கித் திளைத்தார் என்பதையும் பின்வரும் சொற்களில் எடுத்துக் காட்டுகிறார். இச் சொற்கள் அவர் உள்ளம் உருகி வெளியிட்ட சொற்களாகக் காட்சியளிக்கின்றன. இதோ அவர் மொழிந்தவை.

"நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதிகளுக்கு வந்த கதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்க மாட்டாமை ஒன்றே என்னை இத் தொழிலில் வலிப்பது"

"பல பெரும் வித்துவான்கள் இந் நூலை (தொல்காப்பியத்தை) அச்சிட விரும்பியதும் முயன்றதும் இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்டதும் தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களான இதனை அச்சிடின் தம் பெயர்க்குக் குறைவு நேரிடுமென்று தம் முயற்சியைக் கைவிட்டதும் அடியேன் பூரணமாக அறிவேன். ஆதலால் பண்டிதர், கவிராஜ பண்டிதர், மகாவித்துவான், புலவர் என்றின்ன பெரும்பட்ட சுமையைத் தலைமேலேற்றிக் கொள்ளாது இன்னும் பலகாலந் தமிழ் படித்தற்கு உரிமை பூண்டு நிற்கும் என் போலியரே இதில் கையிடுவது பேரவசியமாயிற்று"

கற்றோர் ஏற்றும் கலித்தொகை

தாமோதரனார் பதிப்பித்த பல நூல்களில் அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது அவரின் "கற்றோர் ஏற்றுங் கலித்தொகை"ப் பதிப்பேயாகும். அவரின் 59 ஆவது அகவையில் 1887 இல் இந்நூல் பதிக்கப்பட்டது. தனது அகவை 22 இல் 1854 இல் நீதிநெறி விளக்கத்தை தனது முதல் நூலாக வெளியிட்டவரும் இவரே, கலித்தொகைச் சுவடியை தான் பதிப்பிக்க முனைந்த போது தனக்கு ஏற்பட்ட தொல்லைகளை பின்வருமாறு அவர் நெஞ்சம் நெகிழ உரைக்கிறார். கலித்தொகைப் பிரதிகள் தேடயான் பெற்ற கட்டம் வாயினாற் கூறும் அளவைத்தன்று. முதன்முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது மூல பாடப்பிரதி, அது தலையுங் கடையுமின்றிய குறைப் பிரதி, மேலும் பெரும்பாலும் எழுத்துகள் சிதைந்து ஒரு பாட்டின் சேருறுப்பாவது முற்றும் வாசிக்க முடியாமற் கிடந்ததாற் படிப்பதற்கே வெறுப்புண்டாய் நீக்கிவிட்டேன். "பின்னர்த் தொல்காப்பியப் பரிசோதனைக்காக தேடிய போது ஷ்ரீலஷ்ரீ ஆறு முகநாவலரின் பிரதி அகப்பட்டது. அது கொண்டு கலித்தொகை அருமை உணர்ந்து அது எப்படியும் உலகிற்குப் பயன்பட வேண்டும் என்னும் அவாவுற்று பல ஆதீனங்களுக்கு விண்ணப்பம் செய்த போது தனக்குத் திருவாவடுதுறை ஆதீனம் துணை நின்றது" என்று கூறி ஆறுதலடைகிறார்.

இவை அனைத்தையும் நினைவில் வைத்துத் தான் தாமோதரனாரை மதிப்பிடுகின்றபோது முனைவர் அரசேந்திரன் தாமோதரனாருடைய பெருமையை ஆய்வுள்ளத்தோடு இவ்விதம் மொழிகிறார். "சமயப்பற்று மிகுந்தவரே நம் தாமோதரன். என்றாலும் தமிழின், தமிழரின் தனிப் பெரும் மாண்புகளைச் சமஸ்கிருதம் விரவாத தனித் தமிழ் நூல்களாகப் பழந்தமிழ் நூல்களே இருந்தபடியால் அவற்றை மீட்டலே தமிழுக்கும் தமிழருக்கும் செய்யும் அடிப்படைப் பணிகளின் முதன்மை என்று கருதியிருக்கின்றார். முனைவரின் இக்கூற்றை வரவேற்று நாமும் வழிமொழி கூறும் நிலையிலிருக்கிறோம்.

தமிழ் அறிஞர்களை மதிப்பீடு செய்து அவர்களுக்கு உரிய இடம் வழங்குவதில் தமிழ் ஆய்வாளர் வையாபுரிப்பிள்ளைக்கு தனிச் சிறப்புண்டு. அவர் தனது "தமிழ்ச்சுடர் மணிகள்" என்ற நூலில் தாமோதரனார் பற்றி வழங்கியுள்ள மதிப்பீடு அவர் நடுநிலை நின்றே தாமோதரனாரை மதிப்பீடு செய்துள்ளார் என்பதற்கு சான்று கூறுகிறது. "ஷ்ரீ ஆறுமுக நாவலர் சைவ சமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்து விட்டார்கள்.

வித்துவான் தாண்டவராயன் முதலியார், திவாகரம் முதலிய நூல்களையும் பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசன நூல்களையும் அச்சேற்றுவதில் ஒடுங்கி விட்டார்கள். மழவை மகாலிங்க ஐயர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்து வேறு சில நூல்களையும் வெளியிட்டு அத்துடன் நின்று விட்டார்கள். களத்தூர் வேதசிறி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு அவ்வளவில் திருப்தியுற்றார்கள். திருத்தணிகை விசாகப் பெருமானையர் முதலியோர் குறளுக்குக் தெளிபொருள், பிரபுலிங்கலீலை, சூடாமணி, நிகண்டு முதலியவற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தங்கள் முயற்சியைச் சுருக்கிக் கொண்டார்கள். திருவேங்கட முதலியார், இராசகோபாலப்பிள்ளை முதலானவர்கள் இராமாயணம் வெளியிடுவதிலும் நாலடி முதலிய பதிப்பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். ஷ்ரீ உ.வே. சாமிநாத ஐயர் அப்போது தான் சீவகசிந்தாமணி பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆகவே நமது பிள்ளை அவர்கள் தன்னந்தனியராய்ப் பண்டைத் தமிழ் செல்வப் புதையலைத் தமிழ் மக்களுக்கு அகழ்ந்தெடுத்து உதவும் பெரும் முயற்சியை மேற்கொண்டார். இவ்விதம் தாமோதரனார் தகைமை பற்றி கூறிய பேராசிரியர் வையாபுரி அவர்கள் மேலும் ஒரு படி சென்று "தாமோதரர் தமிழ் ஆர்வம் அவர் உள்ளத்திலே மங்கள ஒளியாய் திகழ்ந்து ஒரு காலைக் கொருகால் வளர்ந்து முடிவில் பேரொளிப் பிளம்பாக சுடர் விட்டெரிந்தது" என்று எம் தாமோதரனார் புகழை உச்ச நிலையில் வைத்து உவந்து போற்றுகிறார். நம் பண்டிதமணி கணபதிப்பிள்ளையும் இத்துறையில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையும் கருத்தினை ஏற்றிய நிலையிற் போலும் "பாழ்பட்டுக் கிடந்த பண்டைய தமிழ் ஏட்டுச் சுவடிகளுக்கு எப்படியும் உயிர் கொடுக்க தாமோதரனார் ஆற்றிய பணி தலையாய பணி" என்று ஓரிடத்திற் குறிப்பிட்டுள்ளார். நம் சி.வை. தாமோதரனார் 01.01.1901 இல் சென்னையில் மறைந்தபோது தனக்கு வழிகாட்டியாக விளங்கிய தண்டமிழ் தாமோதரனாருடைய சிறப்பை பின்வரும் முறையில் உள்ளமுருகப் பாடி தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினார். இதோ அவர் பாடியவை,

"தொல்காப் பியமுதலாந் தொன்னூல் களைப்பதிப்பித்து

ஒல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பின்- அல்காத்

தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை

யாமோ தரமியம்ப வே"

என்ற பாடலில் "பண்பின் அல்காத் தாமோதரர்" என்று குறிப்பிட்டிருப்பது தமிழ் உள்ள வரையில் தாமோதரனார் புகழை நாமும் நம் வழித்தோன்றல்களும் ஏற்றிப்போற்றுவது ஏற்புடைத்து என்பதை எடுத்துரைக்கின்றது அன்றோ.யன் முதலியார், திவாகரம் முதலிய நூல்களையும் பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசன நூல்களையும் அச்சேற்றுவதில் ஒடுங்கி விட்டார்கள்.


மழவை மகாலிங்க ஐயர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்து வேறு சில நூல்களையும் வெளியிட்டு அத்துடன் நின்று விட்டார்கள்.

களத்தூர் வேதசிறி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு அவ்வளவில் திருப்தியுற்றார்கள். திருத்தணிகை விசாகப் பெருமானையர் முதலியோர் குறளுக்குக் தெளிபொருள், பிரபுலிங்கலீலை, சூடாமணி, நிகண்டு முதலியவற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தங்கள் முயற்சியைச் சுருக்கிக் கொண்டார்கள். திருவேங்கட முதலியார், இராசகோபாலப்பிள்ளை முதலானவர்கள் இராமாயணம் வெளியிடுவதிலும் நாலடி முதலிய பதிப்பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். ஷ்ரீ உ.வே. சாமிநாத ஐயர் அப்போது தான் சீவகசிந்தாமணி பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆகவே நமது பிள்ளை அவர்கள் தன்னந்தனியராய்ப் பண்டைத் தமிழ் செல்வப் புதையலைத் தமிழ் மக்களுக்கு அகழ்ந்தெடுத்து உதவும் பெரும் முயற்சியை மேற்கொண்டார். இவ்விதம் தாமோதரனார் தகைமை பற்றி கூறிய பேராசிரியர் வையாபுரி அவர்கள் மேலும் ஒரு படி சென்று "தாமோதரர் தமிழ் ஆர்வம் அவர் உள்ளத்திலே மங்கள ஒளியாய் திகழ்ந்து ஒரு காலைக் கொருகால் வளர்ந்து முடிவில் பேரொளிப் பிளம்பாக சுடர் விட்டெரிந்தது" என்று எம் தாமோதரனார் புகழை உச்ச நிலையில் வைத்து உவந்து போற்றுகிறார். நம் பண்டிதமணி கணபதிப்பிள்ளையும் இத்துறையில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையும் கருத்தினை ஏற்றிய நிலையிற் போலும் "பாழ்பட்டுக் கிடந்த பண்டைய தமிழ் ஏட்டுச் சுவடிகளுக்கு எப்படியும் உயிர் கொடுக்க தாமோதரனார் ஆற்றிய பணி தலையாய பணி" என்று ஓரிடத்திற் குறிப்பிட்டுள்ளார். நம் சி.வை. தாமோதரனார் 01.01.1901 இல் சென்னையில் மறைந்தபோது தனக்கு வழிகாட்டியாக விளங்கிய தண்டமிழ் தாமோதரனாருடைய சிறப்பை பின்வரும் முறையில் உள்ளமுருகப் பாடி தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினார். இதோ அவர் பாடியவை,

"தொல்காப் பியமுதலாந் தொன்னூல் களைப்பதிப்பித்து

ஒல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பின்- அல்காத்

தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை

யாமோ தரமியம்ப வே"

என்ற பாடலில் "பண்பின் அல்காத் தாமோதரர்" என்று குறிப்பிட்டிருப்பது தமிழ் உள்ள வரையில் தாமோதரனார் புகழை நாமும் நம் வழித்தோன்றல்களும் ஏற்றிப்போற்றுவது ஏற்புடைத்து என்பதை எடுத்துரைக்கின்றது அன்றோ.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம்.

"ஆதியிற் றமிழ்நூ லகத்தியற் குணர்த்திய
மாதொரு பாகனை வழுத்துதும்
போதமெய்ஞ் ஞான நலம்பெறற் பொருட்டே."

 
 
செந்தமிழ்   இலக்கணநூலாகிய    தொல்காப்பியம்    எழுத்ததிகாரம்.
சொல்லதிகாரம்,  பொருளதிகாரமென  மூன்று  அதிகாரங்களை  உடையது.
அவற்றுள்,   முன்   ஐந்தியலும்   நச்சினார்க்கினியர்   உரையும்,    பின்
நான்கியலும்,   பேராசிரியர்    உரையுமாயுள்ள    பொருளதிகாரத்தையும்,
சொல்லதிகாரம்  நச்சினார்க்கினியர்  உரையையும்,  பல ஏட்டுப் பிரதிகளை
ஒப்புநோக்கி  ஆராய்ந்து  அச்சிற் பதிப்பித்து முதலில் வெளியிட்டவர்கள்,
யாழ்ப்பாணம்  ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை B. A., அவர்களே.
எழுத்ததிகாரம்  நச்சினார்க்கினியர் உரை,                                                     மழவை மகா வித்துவான் ஸ்ரீமத் மகாலிங்கையர்   அவர்களால்   முன்    அச்சிடப்பட்டதாயினும்    பின்,தென்னாட்டுப்      பிரதிகளோடும்,       ஒப்புநோக்கி       அச்சிட்டு
வெளிப்படுத்தினவர்களும்    பிள்ளையவர்களே.    இவைகளே    யன்றி
வீரசோழியம், இலக்கண விளக்கம் என்னும் இலக்கணநூல்களையும், தொகை
நூல்களில் ஒன்றாகிய  கலித்தொகையையும்,  சூளாமணி, தணிகைப்புராணம்
முதலியவற்றையும்,    முதலில்    அச்சிட்டு     வெளிப்படுத்தியவர்களும்
பிள்ளையவர்களே.   இவைகள்,    இக்காலத்துப்    பிறரால்    அச்சிட்டு
வெளிப்படுத்தப்படுதலின் பிள்ளையவர்கள் தமிழ் நாட்டிற்குச் செய்த அரும்
பெருந்    தொண்டு    எவர்களாலும்     மறக்கக்கூடிய    நிலைமையை
உடையதாயிற்று.  ஆதலால்  அந்நிலையை ஒழித்து, பிள்ளையவர்கள் தமிழ்
உலகுக்குச்    செய்த   நன்றியையும்,   அவர்களையும்   ஞாபகப்படுத்தற்
பொருட்டே  இத்  தொல் - எழுத்ததிகாரம்  நச்சினார்க்கினியர்  உரையை
முன்னர் அச்சிட்டு வெளிப்படுத்தினோம்.
 
இதனை  யாம்  அச்சிடுதற்குமுன்,  எமது  எண்ணத்தை முற்றுவிப்பான்
விழைந்து,   தமிழ்வித்துவான்,   பிரமஸ்ரீ  சி. கணேசையர்  அவர்களிடஞ்
சென்று, தொல் - எழுத்ததிகாரம் நச்சி

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

*"பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய், *
* அவர் நெஞ்சில் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே."*

என பாரதி, உ.வே.சாமிநாதய்யரைப் போற்றுகிறார்.

ஓலைச் சுவடிகளிலிருந்த பழந்தமிழ் நூல்களைத் தேடித்தொகுத்து அச்சிட்டுப்
பெரும்புகழ் பெற்றார் உ.வே.சா எனில், அத்தகைய உ.வே.சா.வுக்கு அருந்தமிழ்
போதித்து அவரைக் கற்றோரவையில் முந்தியிருக்கச் செய்த பெருமைக்குரியவர்
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆவார்.

 ஆசிரியரால் மாணாக்கர் தமிழ்நூற்கடலை நிலைகண்டுணர்ந்தார். மாணாக்கர் தம்
ஆசிரியர் மகாவித்துவானின் வரலாற்றை நூலாக்கி அவரின் அளக்கலாகாப் புலமையை
உலகறியச் செய்தார்.

   - கற்றல்
   - கற்பித்தல்
   - கவிபுனைதல்

எனும் இவற்றை நற்றவமாய் மேற்கொண்ட நற்புலவர் மகாவித்துவான் எனக் கூறுதல்
மிகையன்று.

பலர்க்கும் இன்ன காலமென்னாது எத்தகைய பெருநூலும் எளிதுணர்த்திப் பயனுறுத்தும்
இணையிலா ஆசான் எனத் தம் ஆசானைப் பற்றிச் சாமிநாதய்யர் குறிப்பிடுவார். ஆசானின்
மற்றொரு மாணாக்கர் சி.தியாகராச செட்டியார். பிள்ளை எழுதிக்கொடுத்த நூல்கள்
பற்றிக் கூறுகையில், *"எத்தனையோ கோவைகள் மற்றும் எத்தனையோ புராணங்கள்,
எண்ணிலடங்கா நூல்கள் அத்தனையும் இத்தனையென்று எத்தனை நாவிருந்தாலும் இயம்ப
இயலாது,"* என்பார்.

சிதம்பரம்பிள்ளை - அன்னத்தாச்சி தம்பதியர் மதுரையில் சைவக் குடும்பத்தில்
பிறந்தவர்கள். சிதம்பரம் பிள்ளை மதுரை மீனாட்சியம்மை திருக்கோயிலில் மீன்
முத்திரையிடும் பணி செய்துவந்தார். திருக்கோயில் நிர்வாகத்தோடு கருத்து
வேறுபாடு ஏற்பட்டதால், திருச்சிக்கு மேற்கே காவிரியின் தென்பாலுள்ள எண்ணெய்
மாகாணம் என்னும் ஊரில் வந்து தங்கினார். தமிழறிவு நிரம்பப் பெற்றிருந்த
சிதம்பரம் பிள்ளை அவ்வூரிலிருந்தோர்க்கு தமிழ் நூல்களைக் கற்பித்தார். சிறிது
காலத்துக்குப்பின் அங்கிருந்து அதவத்தூர் சென்று அங்கும் ஆசிரியப்பணியை
மேற்கொண்டார். குடும்பம் அதவத்தூரில் இருந்தபோது ஸ்ரீபவ ஆண்டு பங்குனித்
திங்கள் 26ம் நாள் (6.4.1815) அன்னதாச்சி ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருவருளால் பிறந்தமையின் மீனாட்சிசுந்தரம் எனப்
பெயர் சூட்டினர். குடும்பம் சோமரசம்பேட்டைக்குக் குடிபெயர்ந்தது.
மீனாட்சிசுந்தரம் தந்தையிடம் தமிழ் கற்றார்.

   - நெடுங்கணக்கு
   - ஆத்திச்சூடி
   - அந்தாதிகள்
   - கலம்பகங்கள்
   - பிள்ளைத்தமிழ் நூல்கள்
   - மாலைகள்
   - சதகங்கள்
   - நிகண்டு
   - கணிதம் மற்றும்
   - நன்னூல்

போன்ற இலக்கண நூல்களையும் கற்றுத் தேர்ந்தார்.

கவிபுனையும் ஆற்றலும் பெற்றார். இவரின் கவிபுனையும் ஆற்றலைச் சோதிக்க
விரும்பிய முருங்கப்பேட்டை செல்வர் ஒருவர், "இப்பாட்டுக்கு அருத்தம் சொல்"
என்று முடியுமாறு ஒரு வெண்பா இயற்றச் சொன்னாராம். உடனே மீனாட்சிசுந்தரம்
நெல்லுக்கும் திரிமூர்த்திகளுக்கும் சிலேடை அமைத்து ஒரு வெண்பா பாடினார்.

*"ஒண்கமலம் வாழ்ந்து அன்னமாகி உரலணைந்து *
* தண்கயநீர்த் தூங்கித்தகும் ஏறூர்ந்து - ஒண்கதிரின் *
* மேயவித்தான் மூவராகும் விளம்பியதென் *
* தூயஇப் பாட்டுக் கருத்தம் சொல்."*

இப்பாட்டில்,
ஒண்கமலம் வாழ்ந்து அன்னமாகி - நெல்லுக்கும் பிரமனுக்கும் சிலேடை
உரலணைந்து தண்கயநீர்த்தூங்கி -    நெல்லுக்கும் திருமாலுக்கும் சிலேடை
ஏறூர்ந்து ஒண்கதிரின் மேயவித்தால்-நெல்லுக்கும் சிவனுக்கும் சிலேடை
**
*"சொல்" என்பதற்கு "நெல்" என்று பொருளுண்டு. "இப்பாட்டுக் கருத்தம் சொல்
என்றால்", "இப்பாட்டுக் கருத்தம் நெல்" என்பது *
* பொருளாகும்.*

மீனாட்சிசுந்தரத்தின் 15ம் வயதில் தந்தை சிதம்பரம் பிள்ளை காலமானார். அவர்
தந்தை இறந்த ஆண்டின் பெயர் "விரோதி". "விரோதி" என்னும் சொல்லை இருபொருளில்
அமைத்து அவர் எழுதிய வெண்பா, இளம் வயதிலேயே அவரின் கவிபாடும் ஆற்றலுக்குச்
சான்றாக உள்ளது. அவ்வெண்பா வருமாறு:
*"முந்தை அறிஞர் மொழிநூல் பல நவிற்றும் *
* தந்தை எனைப் பிரியத் தான்செய்த- நிந்தை மிகும் *
* ஆண்டே விரோதியெனும் அப்பெயர் நிற்கே தகுமால் *
* ஈண்டேது செய்யாய் இனி."*

சோமரசம்பேட்டையில் இருந்தபோது காவேரியாச்சி என்ற பெண் இவரின் வாழ்க்கைத்
துணைவியானார். தமிழ்ப் புலவர்களைக் கண்டு உரையாடுவதற்கும், தம் ஐயங்களைப்
போக்கிக் கொள்வதற்கும் வாய்ப்பாகத் திருச்சி மலைக்கோட்டை கீழவீதியில்
குடியேறினார். முத்துவீரியம் என்னும் இலக்கண நூலைச் செய்த,

   - முத்துவீர வாத்தியார்
   - திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார்

முதலான புலவர்களுடன் அளவளாவும் வாய்ப்பினைப் பெற்றார். வெளியூர்ப் புலவர்கள்
இவரைத் "திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை" எனக் குறிப்பிட்டனர்.

   
   - மலைக்கோட்டை மெளனமடம் வேலாயுத முனிவர்
   - காஞ்சிபுரம் சபாபதி முதலியார்
   - திருவம்பலம் தின்னமுதம் பிள்ளை
   - மழவை மகாலிங்கையர்


ஆகிய தமிழ்ப் புலவர்களை அணுகித் தம் ஐயங்களைப் போக்கிக் கொண்டார்.


   - எழுத்து
   - சொல்
   - பொருள்
   - யாப்பு
   - அணி

ஆகிய ஐந்திலக்கணங்களையும் தக்கவரிடம் பாடங்கேட்டார்.


   1. திருவாவடுதுறை அம்பலவாண முனிவரிடம் கம்பரந்தாதியையும்
   2. கீழ்மேலூர் சுப்பிரமணிய தேசிகரிடம் குட்டித் தொல்காப்பியம் என்று
   அழைக்கப்படும் இலக்கண விளக்கத்தையும் பாடங்கேட்டார்.

இதனால் அவர் தமிழ்ப் புலமை மேலும் சிறப்புற்றது.
பல சிவத்திருத்தலங்களுக்குச் சென்று, அத்தலங்களைப் பற்றித்

   - தலபுராணங்களும்
   - பதிகங்களும்
   - அந்தாதிகளும்
   - அங்குள்ள இறைவன், இறைவி மீது பிள்ளைத்தமிழ்
   - கலம்பகம்
   - கோவை
   - உலா
   - தூது
   - குறவஞ்சி 

முதலான நூல்களும் இயற்றினார். 


1851ல் திரிசிரபுரத்திலிருந்தவர்கள் விரும்பிய வண்ணம் சைவ எல்லப்ப நாவலர்
இயற்றிய "செவ்வந்திப்புராணம்" என்னும் நூலைப் பதிப்பித்தார். 



1860 முதல் மாயூரத்தில் வசிக்கத் தொடங்கி, அங்கிருந்து அடிக்கடி திருவாவடுதுறை
மடத்திற்குச் சென்று வந்தார். மீனாட்சிசுந்தரம் பிள்ளை. திருவாவடுதிறை ஆதீன
வித்துவானாக நியமிக்கப்பட்டார். ஆதீனகர்த்தர் அம்பலவாணதேசிகர் மீது கலம்பகம்
பாடினார். ஆதீனகர்த்தர் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு "மகாவித்துவான்" என்ற
பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார். அன்று முதல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.

1871ல் உ.வே.சாமிநாதய்யர் மகாவித்துவானின் மாணாக்கரானார். இறுதிவரைத் தம்
ஆசானோடிருந்து பல்வேறு நூல்களைப் பாடங்கேட்டார். மகாவித்துவான்
திருவாவடுதுறையிலிருந்து பட்டீஸ்வரம், திருப்பெருந்துறை, குன்றக்குடி முதலிய
தலங்களுக்குச் சென்றுவந்தார்.

பிள்ளையவர்கள் 1876ல் நோய்வாய்ப்பட்டார். மாணாக்கர் சவேரிநாத பிள்ளை மார்பில்
சாய்ந்த வண்ணம், திருவாசம் படிக்குமாறு கூறினார். உ.வே.சா திருவாசகம்
அடைக்கலப்பத்தைப் பாட, *1.2.1876ல் தம் 61ம் வயதில்* இறைவனடி சேர்ந்தார். 



   - பத்தொன்பதாம் நூற்றாண்டின் கம்பன்
   - இணையிலாப் புலவன்
   - மெய்ஞானக் கடல்
   - நாற்கவிக்கிறை
   - சிரமலைவாழ் சைவசிகாமணி



முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றார்.


   - தலபுராணங்கள் 22
   - சரித்திரம் 3
   - மான்மியம் 1
   - காப்பியம் 2
   - பதிகம் 4
   - பதிற்றுப்பத்தந்தாதி 6
   - யமக அந்தாதி 3
   - மாலை 7
   - பிள்ளைத்தமிழ் 10
   - கலம்பகம் 2
   - கோவை 3
   - உலா 1
   - தூது 2
   - குறவஞ்சி 1
   - பிறநூல்கள் 7 



என இவர் செய்துள்ள மொத்த நூல்கள் ஏறத்தாழ 80. மேலும் பல தனிச் செய்யுள்களையும்
இயற்றியுள்ளார்.


*"பார்கொண்ட புகழ் முழுதும் ஒருபோர்வை *
* எனப் போர்த்த பண்பின்மிக்க *
* ஏர்கொண்ட மீனாட்சி சுந்தரவேள்." - *என்று சி.சாமிநாததேசிகர் பாராட்டுவது பொருத்தமே.


நன்றி: தமிழ்மணி (தினமணி)

செந்தமிழ் நடைகொண்ட சாஸ்திரி

தமிழை உயர்தனிச் செம்மொழி எனச்சுட்டிய ஆராய்ச்சியாளர். தாய்மொழியாம்
தமிழுக்கு இயல், இசை, நாடக அணிகளைச் சூட்டி அழகு பார்த்தவர்! தன்னால் தமிழ்
வாழவேண்டும் என்ற உணர்வாளர். தாய்மொழியிலேயே கல்வி கற்க வலியுறுத்தியவர்.
இம்மண்ணில் முப்பத்தி மூன்று ஆண்டுகளே வாழ்ந்தாலும், தமிழ்-தமிழர்
முன்னேற்றத்துக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். "சூரிய நாராயண
சாஸ்திரி" என்னும் தமது வடமொழிப் பெயரை முதன் முதலில் "பரிதிமாற் கலைஞன்" எனத்
தமிழ்ப் பெயராக்கிக் கொண்டவர். நாடகத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர். நவீனத்
தமிழிலக்கிய வரலாற்று ஆராய்ச்சிக்கு வித்திட்டவர். "சூரியநாராயண சாஸ்திரி",
"பரிதிமாற் கலைஞர்" எனப் பெயர் கொண்ட பின்னரும், "திராவிட சாஸ்திரி" என விடாது
மக்களால் புகழப்பட்டவர்!

மதுரைக்கு அருகில் உள்ள விளாச்சேரி என்னும் சிற்றூரில் கோவிந்த சாஸ்திரி -
இலட்சுமியம்மாள் வாழ்விணையருக்கு *6.7.1870ம்* ஆண்டு பிறந்தார் பரிதிமாற்
கலைஞர்.

தமிழ்ப் பள்ளியில் சேர்ந்து அன்னைத் தமிழும் ஆரம்பக் கணிதமும் கற்றார். தம்
தந்தையாரிடம் வடமொழியையும் முறையாகப் பயின்றார். பின்னர் மதுரை, பசுமலைக்
கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார். அக்கல்லூரித் தமிழாசிரியர் மூலம்
தமிழ் இலக்கணம் நன்கு கற்றார். மதுரையில் இருந்த உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து
தமது கல்வியை மேலும் தொடர்ந்தார். மதுரைக் கலாசாலைத் தமிழாசிரியர்
மகாவித்துவான் சு.சபாபதி முதலியாரிடம் தொல்காப்பியம் மற்றும் சங்க
இலக்கியங்களையும் கசடறக் கற்றார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் எஃப்ஏ தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்தார்.
இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி வழங்கிய உதவித் தொகையையும் பெற்றார்.
சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தார். பரிதிமாற் கலைஞர்
கல்லூரியில் பயிலும் போதே "விவேக சிந்தாமணி" என்னும் இதழில் கட்டுரைகள் எழுதத்
தொடங்கினார். தமிழிலும் வேதாந்த சாத்திரத்திலும் பல்கலைக் கழக அளவில் 1892ம்
ஆண்டு நிகழ்ந்த பி.ஏ. தேர்வில் முதல் மாணவராகத் தேறினார். தமிழில் முதல்
மாணவராகத் தேர்ச்சி பெற்றதையொட்டி மன்னர் பாஸ்கர சேதுபதி பெயரால் நிறுவப்பட்ட
பொற்பதக்கத்தையும் பரிசாகப் பெற்றார்.

யாழ்ப்பாணத் தமிழறிஞர் சி.வை.தாமோதரம் பிள்ளை அக்காலத்தில் சென்னையில்
வாழ்ந்து வந்தார். பல்கலைக்கழக அளவில் தமிழில் முதலிடம் பெற்ற பரிதிமாற்
கலைஞரைத் தமது இல்லத்துக்கு அழைத்தார். ஒரு வினாத்தாள் கொடுத்து விடை எழுதித்
தருமாறு கூறினார். பரிதிமாற் கலைஞர் அரைமணி நேரத்தில் விடை எழுதி
அளித்தார். *"உமது
விடைகள் உயரிய செந்தமிழ் நடையில் புதுக் கருத்துகளைக் கொண்டு விளங்குகின்றன.
உம்மைத் "திராவிட சாஸ்திரி" என்று அழைத்தலே சாலப் பொருந்தும்,"* என்று
பாராட்டி, தாம் பதிப்பித்த இலக்கண, இலக்கிய நூல்களைத், தம் கையெழுத்திட்டு
அன்பளிப்பாக வழங்கினார்.

பரிதிமாற் கலைஞர், தமிழ் மீது உள்ள ஆராக்காதலால், தமிழாசிரியர் பணியை, தாம்
பயின்ற கிறிஸ்தவக் கல்லூரியில் ஏற்றார். கல்லூரி அளவில் தமிழாசிரியர் பணியை
விரும்பி ஏற்றுக்கொண்ட முதல் பட்டதாரி இவரேயாவார்.

பரிதிமாற் கலைஞர் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் புலமை படைத்தவர்.
மாணவர்களுக்கு இலக்கண, இலக்கியத்தை சுவையுடன் மேலும் கற்க வேண்டும் என்ற ஆவலைத்
தூண்டும்படியாகக் கற்பிப்பார். சமகாலக் கருத்துகளைப் பண்டைய இலக்கியம்
கொண்டும், தமிழர் பண்பாடு, நாகரிகம், மொழி வரலாறு முதலியவற்றை ஆராய்ச்சி
நோக்கில், வரலாற்றுச் சான்றுகளோடு விளக்குவார். கல்லூரியில் பயிலும்
மாணவர்களுள் இயல்பாகவே தமிழறிவும், தமிழார்வமும் உடைய மாணவர்களைத் தமது
இல்லத்துக்கு அழைத்து அவர்களுக்கு தொல்காப்பியம், நன்னூல், இறையனார்
அகப்பொருள், நம்பியகப்பொருள், மாறனலங்காரம், தண்டியலங்காரம் முதலியவற்றையும்,
சைவ சமய சாத்திர நூல்களையும் கற்பித்தார். ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு
நடத்தினார். அம் மாணவர்கள் "இயற்றமிழ் மாணவர்கள்" என்று அழைக்கப்பட்டனர்.

1901ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் மதுரையில் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டது.
அத்தொடக்க விழாவில் பரிதிமாற் கலைஞர் கலந்து கொண்டு தமிழ்ச் சங்கம் ஆற்ற
வேண்டிய பணிகள் குறித்து விவரித்தார். தமிழ்ச்சங்கம் நடத்திய "செந்தமிழ்"
இதழில், தமிழின் சிறப்புக் குறித்து "உயர்தனிச் செம்மொழி" என்னும் ஆராய்ச்சிக்
கட்டுரையை எழுதினார். *தமிழைச் செம்மொழி என்று முதன் முதலில் மெய்ப்பித்து
நிறுவியவர் பரிதிமாற் கலைஞரே ஆவார். *

பரிதிமாற் கலைஞர், "சென்னைச் செழுந்தமிழுரைச் சங்கம்" என்ற சங்கத்தை நிறுவி,
அதன் மூலம் கல்லூரித் தமிழ்ப் பாடங்களுக்கு உரை எழுதி அளித்தார். 1902ம் ஆண்டு
கல்லூரிப் பாடத்திட்டத்திலிருந்து தமிழை விலக்குவதற்குச் சென்னைப்
பல்கலைக்கழகம் முடிவெடுத்தது. அதையறிந்த பரி திமாற் கலைஞர், மு.சி.பூரணலிங்கம்
பிள்ளையுடன் இணைந்து அம்முடிவை முறியடித்தார்.

*"தமிழ், தென்னாட்டில் வழங்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம்
முதலியவற்றுக்கெல்லாம் தலைமையானது. எனவே, தமிழ் உயர் மொழியாகும். தான்
வழங்கும் நாட்டில் பயிலும் ஏனைய மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல
ஆற்றல் சான்றதே தனிமொழி. தமிழ் தனித்து இயங்கவல்லதால் தனிமொழியாம்," *என்று
விளக்கினார். *"திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும், பொருந்திய தூயமொழியே
செம்மொழியாம்," என்பது செம்மொழிக்கான இலக்கணம்.* தமிழ் மொழி, செம்மொழிக்கான
இலக்கணத்தைக் கொண்டுள்ளது என்பதை நூறாண்டுகளுக்கு முன்பே எடுத்துரைத்தவர்
பரிதிமாற் கலைஞர்.

குழந்தைகள் பன்னிரண்டு வயது வரை தமிழ் மொழியிலேயே கல்வி கற்க வேண்டுமென்று
ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே முழங்கியவர்.

"மதிவாணன்" என்ற நாவல், "ரூபாவதி" அல்லது "காணாமற் போன மகள்", "கலாவதி" முதலிய
உரைநடை நாடகங்கள், "மானவிஜயம்" என்ற செய்யுள் நாடகம், "தனிப்பாசுரத் தொகை",
"பாவலர் விருந்து", "சித்திரகவி விளக்கம்" முதலான கவிதை நூல்கள், "தமிழ்
மொழியின் வரலாறு" என்ற ஆய்வு நூல், "ஸ்ரீமணிய சிவனார் சரித்திரம்" என்ற
வாழ்க்கை வரலாறு நூல், "நாடகவியல்" என்ற நாடக இலக்கண நூல் ஆகிய நூல்களை எழுதி
உலகுக்கு அளித்துள்ளார் பரிதிமாற் கலைஞர்.

"தமிழ்ப்புலவர் சரிதம்" என்ற கட்டுரை நூலில், புகழ்பெற்ற ஒன்பது புலவர்களுடன்
தமிழறிஞர்கள் பலரின் வரலாற்றை எழுதியுள்ளார். சபாபதி முதலியார் இயற்றியுள்ள
"திருக்குளந்தை வடிவேல் பிள்ளைத் தமிழ்," "மதுரைமாலை" ஆகிய இரு நூல்களையும்,
"கலிங்கத்துப்பரணி", "நளவெண்பா", "திருவுத்தரக்கோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்
தமிழ்", மழவை மகாலிங்க அய்யரின் "இலக்கணச் சுருக்கம்", தாண்டவராய முதலியாரின்
"பஞ்ச தந்திரம்", முதலிய 67 நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

பரிதிமாற் கலைஞர் *2.1.1903ம்* ஆண்டு தமது முப்பத்து மூன்றாம் வயதில்
எலும்புருக்கி நோயால் தாக்கப்பட்டு மறைந்தார் என்பது முத்தமிழுக்கு நேர்ந்த
பேரிழப்பாகும்.

"பரிதிமாற் கலைஞரால் இயற்றப்பட்ட நூல்கள் யாவும், தமிழ் அன்னைக்கு ஏற்ற அணிகள்.
அவைகளுள் ஒன்று "தமிழ் மொழியின் வரலாறு", தமிழ் நாட்டில், தமிழ் மொழி
வரலாற்றுக்கு வழிகாட்டியவர் பரிதிமாற் கலைஞரே. அவர் நீண்ட நாள் உலகில்
வாழ்ந்திருந்தால் தமிழ் அன்னை இழந்த அரியாசனத்தில் ஏறி அமர்ந்திருப்பாள்.
முத்தமிழும் ஆக்கம் பெற்றிருக்கும்" என்று புகழ்ந்துரைத்துள்ளார் தமிழ்த்
தென்றல் திரு.வி.க.

சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் 1970ம் ஆண்டு பரிதிமாற் கலைஞருக்கு நூற்றாண்டு
விழா கொண்டாடப்பட்டது. பரிதிமாற் கலைஞரின் பிறந்த ஊரான விளாச்சேரியில் அவர்
வாழந்த வீட்டை நினைவு இல்லமாக்கிப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அவரது நூல்கள்
அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
தமிழே தன் இறுதி மூச்சாக வாழ்ந்தவர் பரிதிமாற் கலைஞர்! அவர் புகழ் "செம்மொழித்
தமிழ்" உள்ளவரை சீரோடும் சிறப்போடும் நிலைத்து நீடு நிற்கும்!



நன்றி: தமிழ்மணி (தினமணி)

தமிழ் இலக்கிய வரலாற்றில்

தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிப்பு முயற்சிகளைப் பற்றிய பதிவுகள் முழுக்கவும் மேட்டுக்குடியினரின் பார்வையிலேயே இருக்கின்றன. அச்சு வசதி ஏற்பட்ட பிறகு பழந்தமிழ் நூல்களையும், தாம் புனைந்தவற்றையும் பதிப்பித்தவர்கள் என ஆதிக்கச் சாதியினரையே பட்டியலிடுகின்றனர்.

மழவை மகாலிங்க (அய்யர்), ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் (பிள்ளை), உ.வே. சாமிநாத (அய்யர்), சுப்பராயச் (செட்டியார்) என்று அப்பட்டியல் நீள்கின்றது. 1850 தொடங்கி 1920 வரையில் செய்யப்பட்ட பதிப்பு முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டிருக்கின்றனர். இந்த வரலாற்றிலே தலித்துகளுக்கும், இசுலாமியர்களுக்கும் இடம் அளிக்கப்படவில்லை. இதில் முரண்நகை எதுவெனில், தலித் கிறித்துவர்கள் வெள்ளையர்களுக்கு நெருக்கமாய் இருந்ததாலும், இசுலாமியர்கள் ஆளும் நிலை பெற்றிருந்ததாலும் இவ்விரு பிரிவினர்க்குமே அச்சுத்தொழில் சாத்தியமானதாக இருந்திருக்கும் என்பதே.

நன்றி : கீற்று 

தி.வே. கோபாலையர்

முன்னுரை

     சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அச்சுப்பொறி தமிழகத்தில் அறிமுகமானபிறகும் சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதி தொட்டே ஏட்டுச்சுவடியிலிருந்த இலக்கண நூல்கள் பலவும் அச்சிடப்பெறுவவாயின. மழவை மகாலிங்கஐயர், ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளை முதலிய சான்றோர் பலரால் சென்ற நூற்றாண்டில் அச்சிடப்பெற்ற இலக்கண நூல்கள் பலவும் ஏனைய பலராலும் பின்னர் அச்சிடப்பெறவே, ஒவ்வொரிலக்கண நூலும் இக்காலத்துப் பல பதிப்புக்களைப் பெற்றுள்ளது. அப்பதிப்புக்களுள் ஆய்வுப்பதிப்பு என்ற சிறப்பிற்குறிய பதிப்புக்கள் மிகச் சிலவே.

     சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர் பலரும் தாமே ஏட்டில் எழுதுவதிலும், ஏட்டில் எழுதப்பெற்றவற்றை வாசிப்பதிலும் வல்லவராயிருந்தனர். சிறார்கள் கூடப் பனையோலையைப் பதப்படுத்தி அதன்கண் எழுதப்பழகினர். ஒரே சுவடியைப் பலரும் பெயர்த்து எழுதிக்கொண்டு பாடங்கேட்கும் நிலையே பெரும்பாலும் இருந்தது. இச்சுவடிகளை மூன்று திறத்தனவாகப் பகுக்கலாம். அறிவு குறைந்த நிலையிலுள்ள மாணாக்கர் ஆசிரியரிடம் பாடம் கேட்பதற்காக எழுதிவைத்த சுவடிகள் சில. சுவடியில் எழுதுவது எளிய செயல் அன்று ஆதலின், சுவடியில் எழுதுதலில் பழகியவர் தேவைப்பட்டவருக்குக் கூலிக்காக எழுதிக்கொடுத்த சுவடிகள் சில. கற்று வல்ல சான்றோர் தாம் பின் ஆராய்ச்சி செய்வதற்காகத் தமக்குக் கிட்டிய புதிதில் மேம்போக்கான பிழைகளை நீக்கிச் சுவடிகளில் வரைந்து வைக்க அங்ஙனம் அமைந்த சுவடிகள் சில. பிழைகள்களையப்படாமல் இருந்த மூலச்சுவடியைப் பார்த்து மாணாக்கர் பலரும் படியெடுத்த காலத்து அவர்களுடைய அயர்வாலும், எழுத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலாமையினாலும் ஏற்பட்ட வழுக்களைக் கொண்ட சுவடிகளே பெரும்பான்மையவாம். அவற்றுள் மாணாக்கருக்கு ஆசிரியர் பாடம் சொல்லியபொழுது அவர் குறிப்பிட்ட அருஞ்செய்திகள் சுவடிகளில் மாணாக்கரால் குறித்துக் கொள்ளப்பட அவையும் மூலத்தின் கூறுகளாக மயங்கிக் கொள்ளப்படும் நிலையும் உண்டு.

     இத்தகைய நிலைகளை உடைய சுவடிகள் பலவற்றையும் ஒப்பு நோக்கித் தம்மால் இயன்ற அளவு வழுக்களைக் களைந்து சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சான்றோர் இலக்கண நூல்கள் பலவற்றை அச்சேற்றினர். சுவடிகளில் மெய்யெழுத்துக்கள் புள்ளியிடப்படமாட்டா; ஒரே கொம்பே நெடிலுக்கும் குறிலுக்கும் பயன்படுத்தப்பட்டது. இடையின ரகரத்திற்கும் உயிர்மெய் நெடில்கள் சில பெறும் ஒலிகளுக்கும் வேறுபாடு புலப்படுத்தப்படவில்லை. சுவடிகளில் இந்நிலையில் பொனபினனே-பேரன்பினனே என்பதைப் போனபின்னே எனவும், கொதை கொளவாமன-கோதை கேரளவர்மன் என்பதனைக் கோதை கொள்வர்மன் எனவும் பிறழ உணர்ந்து பதிப்பித்தற்கண் தவறு ஏற்படுதல் இயல்பே. ஏட்டுச்சுவடிகளில் நூற்பா எண்ணையடுத்து நூற்பா, அந்நூற்பாப் பாயிரம் அதன் பதவுரை அல்லது பொழிப்புரை விசேடவுரை, எடுத்துக்காட்டுக்கள் முதலிய யாவும் தொடர்ந்து எழுதப்பெற்றிருக்கும். நிறுத்தக்குறிகள் இடம்பெற மாட்டா; எடுத்துக்காட்டுப் பாடலுக்கும் உரைநடைக்கும் வேறுபாடு புலப்படாது. மேலும் சென்ற நூற்றாண்டின் முற்பகுதி இடைப்பகுதிகளில் மக்களிடையே சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் முதலிய பழைய செய்யுள்கள் பற்றி அறிவு மங்கியிருந்ததால் சங்க இலக்கியம் முதலியவற்றிலிருந்து குறிப்பிடப்பட்ட மேற்கொள்கள் சிற்சில இடங்களில் பிழைபட எழுதப்பட்டிருத்தலும் கூடும். இவ்வளவு குறைபாடுகளையும் தம்மகத்துக் கொண்ட ஏட்டுச்சுவடிகளைக்கொண்டு முதன்முதல் இலக்கண நூலகளைப் பதிப்பித்த சான்றோர் பலரும் அரும்பாடு பட்டிருக்கிறார்கள் ஏட்டுச் சுவடிகளில் தாமே எழுதிப் பழகிய அப்பெரியோர்கள் ஏட்டில் எழுதிப் பழகாத நம்மைவிட ஏட்டுச் சுவடிகளை விரைந்து பிழையற வாசிப்பதில் வல்லவராயிருந்தமை தேற்றம். ஒற்றைக் கொம்பு இரட்டைக் கொம்பு வரைய வேண்டிய இடங்களில் வரைந்து மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியிட்டு நெடில்களுக்கு வரையப்படும் கால்களுக்கும் இடையின ரகரத்திற்கும் வேற்றுமை காட்டி, ஒவ்வொரு செய்தி முடிந்த பின்னரும் முற்றுப்புள்ளியிட்டு முதலில் பதிப்பிக்கப்பெற்ற இலக்கண நூல்களில் உரை, எடுத்துக்காட்டு, பாடல்கள் முதலியன தனித்தனியே பிரித்துப் பதிப்பிக்கப்படவில்லை எனினும் ஏட்டுச்சுவடிகளான் அல்லலுற்ற கற்சிறாருக்குத் தொல்லையின்றி எளிதில் செய்திகளை வாசித்தறியும் அளவிற்கு அப்பதிப்புக்கள் பெரிதும் பயன்படுவவாயின.
    
     பொதுவாக ஏடுகளிலோ காகிதங்களிலோ எழுதுபவர் விரைவாக எழுதப்பழகுதல் வேண்டும். அங்ஙனம் எழுதும்போது எழுத்துக்களின் வடிவு அளவு தெளிவு என்பனவற்றை உட்கொண்டு எழுதுதல் வேண்டும். வடிவானது-ஒவ்வொரெழுத்துக்கும் சான்றோர் வகுத்துள்ள வடிவம். அளவாவது பல எழுத்துக்களைத் தொடர்ந்து எழுதும்போது ஓரெழுத்து சிறியதாகவும் பிறிதோரெழுத்து பெரியதாகவும் அமையாமல் யாவும் ஒரு சீரான அளவினவாக இருத்தல், தெளிவாவது விரைந்து எழுதும்போது ஓரெழுத்து பிறிதோரெழுத்தோடு சேர்ந்து வடிவில் வேற்றுமை தோற்றி வாசிப்பவருக்கு இஃது எந்த எழுத்தோ என்று மயங்கும் நிலையைத் தாராமல் ஐயுறவு இன்றி வாசிப்பதற்கு ஏற்பத் தெளிவாக அமைந்திருத்தல். எழுதும்போது வடிவு அளவு தெளிவு விரைவு என்ற நான்கும் உள்ளத்துக் கொள்ளப்படல் வேண்டும். எனினும் இறுதியில் கூறப்பட்டுள்ள விரைவு நிகழும்போது ஏனைய மூன்றும் நெகிழ்க்கப்படுகின்றன.

     இந்நிலை ஏட்டுச் சுவடிகள் பலவற்றில் காண்கிறோம். நல்ல காகிதத்தில் மை நிரப்பப் பெற்ற எழுதுகோலால் எழுதும்போதே, இக்காலத்தும் பலர் எழுதும் செய்திகளைப் பிழையறப் படித்து உணர இயலாத நிலையில் அவர்தம் எழுத்தமைப்பு உள்ளமை வெளிப்படை. பெரிதும் பழக்கத்தில்லாத இலக்கண நூல்களைச் சிறிதளவே கல்வி பயின்றவர் பொருள் விளங்காமலே பிறிதொரு சுவடியைப் பார்த்துப் படியெடுத்த சுவடியைப் பிழையறுத்து உள்ளவாறு உணர்வதற்கண் உள்ள உழைப்பு அளவிடற்பாலதன்று. சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சான்றோர் பலரும் தாமும் ஏட்டுச் சுவடியில் எழுதிப் பழகிய காரணத்தால்தான் பழுதுபட்ட சுவடிகளைக் கூட ஓரளவு உணர்ந்து பதிப்பித்தற்கண் ஆற்றல் பெற்றிருந்தனர். அவர்கள் தம்மால் உண்மை நிலை காண இயலவில்லை என்று விடுத்த பகுதிகள் இன்றும் உண்மை நிலை காணப் பெறாத நிலையிலேயே உள்ளன. இதற்கு எடுத்துக்காட்டாகப் பரிபாடல் முதற்பாடலில் உள்ள அராகங்களையும் வீரசோழியத்தில் உள்ள எட்டாரைச் சக்கரத்தையும் குறிப்பிடலாம்.

     பத்திப்பிரிப்பு எதுவும் இன்றிப் பதிப்பிக்கப்பட்ட பதிப்புக்களை அடுத்துத் தேவையான இடங்களிலெல்லாம் பத்திகளைப் பிரித்தும், உரைநடை மேற்கோள்களையும், செய்யுள் மேற்கோள்களையும் வேறுபிரித்துக் காட்டியும், சுருக்கமான முன்னுரை வரைந்தும் இலக்கண நூல்களைப் பதிப்பிக்கத் தொடங்கினர்.

     இலக்கண நூலுக்கு விரிவான பதிப்புரை, நூலாசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, நூற்சிறப்பு, உரைநயம் முதலியவற்றை முதற்கண் வரைந்து நூற்பாக்களுக்குத் தலைப்பிட்டு, நூற்பா உரைப்பாயிரம், பதவுரை அல்லது பொழிப்புரை, எடுத்துக்காட்டு, பிறர் கருத்தை மறுத்தல் போன்றவற்றைத் தனித்தனிப் பத்திகளில் அமைத்து, எடுத்துக்காட்டுப் பாடல்கள் எந்த நூல்களைச் சேர்ந்தன என்பதனைக் குறிப்பிட்டு மறுக்கப்பட்ட கருத்து யாருடையது, அஃது எங்குள்ளது என்பதனை அடிக்குறிப்பில் தந்து, இறுதியில் விளங்கா மேற்கோள் அகராதி முதலிய பிற்சேர்க்கைகளுடன் நன்னூல்-சங்கரநமசிவாயருரையின் இரண்டாம் பதிப்பு சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

     ஐயரவர்கள் பதிப்பித்த இலக்கண நூல்கள் புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல் மயிலைநாதர் உரை, நன்னூல் சங்கர நமசிவாயர் உரை, தமிழ் நெறி விளக்கம் என்பனவேயாகும். இவை ஏனைய இலக்கண நூல்களை யாங்கனம் பதிப்பித்தல் வேண்டும் என்பதற்கு முன்னோடியாக உள்ளன. இன்று பெரும்பாலான தமிழ் இலக்கண நூல்கள் பதிப்பில் வந்துவிட்டன. தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களுக்கும் பல பதிப்புக்கள் வந்துள்ளன. அவற்றுள், சுன்னாகம் கணேசையர் பதிப்பு மிகச் சிறந்த பதிப்பு என்று சான்றோர் பலரும் கொள்வர். அவருடைய பதிப்பில் எடுத்துக்காட்டுச் சொற்றொடர்கள் வந்துள்ள பாடல்கள் பலவும் எவ்வெந் நூலைச் சார்ந்தவை என்பது பெரும்பாலும் சுட்டப்பட்டுள்ளது. எனினும் ஐயர் பதிப்பை ஒத்த நிறைவு அதன்கண் இல்லை இன்றே கருத வேண்டியுள்ளோம். ஒரு சில எடுத்துக் காட்டுக்களைக் காண்போம்.

1. ‘ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை’ தொ.எ.180 சிறுபான்மை இன் சாரியை வரும் என்று கொள்க. ‘ஒன்றாக நின்ற கோவினை அடக்க வந்த எனவரும்… ஒன்னாது நின்ற, கோவினை அடர்க்கவந்து’ சிந். 316 அடி 2-3 என்பதே உண்மையான பாடம். இதனை ஐயர் அவர்கள் சிந்தாமணிப்பதிப்பில் பிரயோக விளக்கம் என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.

2. ‘மின்னும் பின்னும் பன்னும் கன்னும்’
அந்நாற் சொல்லும் தொழிற்பெயர் இயல’
                                     …தொ.எ.345.3

இந்நூற்பா உரையுள், வரலாறு குறிப்பிடும் இடத்து ‘மின்னுச் செய்விளக்கத்துப் பின்னுப் பிணியவிழ்ந்த’ எனவும் மின் என்பது மன்னுதற் றொழிலும், ‘மின்னு நிமிர்ந்தன்ன’ என மின்னெனப் படுவதோர் பொருளும் உணர்த்தும் எனவும் செய்திகள் காணப்படுகின்றன.

மேற்கோள் குறிக்குள் அமைக்கப்பட்டுள்ள ‘மின்னுக்…..யவிழ்ந்த’, ‘மின்னு நிமிர்ந்தன்ன’ என்ற தொடர்கள் எவ்வெந்நூலைச் சார்ந்தன என்ற செய்தி குறிப்பிடப்படவில்லை.
இவற்றுள் ‘மின்னுநிமிர்ந்தன்ன’ என்ற தொடர் புறநானூறு 57 ஆம் பாடல் எட்டாம் அடியில் உள்ளது.

     ‘மின்னுச்செய் விளக்கத்து’என்ற தொடர் கலித்தொகை 41 ஆம் பாடலின் 6ஆவது ஆடியில் ‘கொடிவிடுபு இருவிய மின்னுச் செய்விளக்கத்து’ என அமைந்துள்ளது.

     ‘பின்னும் பிணியவிழ்ந்த’ என்ற தொடர் யாப்பருங்கலக்காரிகை 41ஆம் காரிகை உரையுள், பகர மெய் வருக்க மோனைக்கு எடுத்துக்காட்டாகக் குறிக்கப்பட்டுள்ள ‘பகலே பல்பூங்கானல்’ என்ற பாடலின் மூன்றாவது அடியாகிய ‘பின்னுப்பிணியவிழ்ந்த நன்னெடுங்கூந்தல்’ என்பதன்கண் உள்ளது. வெவ்வேறிடங்களிலுள்ள இரண்டு தொடர்களையும் இணைத்து, ‘மின்னுச் செய்விளக்கத்துப் பின்னுப்பிணியவிழ்ந்த’ என்று ஒரே மேற்கோள் குறிக்குள் நாற்சீர்கொண்ட செய்யுளடிபோல அமைந்திருத்தலை அப்பதிப்பிலும் காண்கிறோம்.

3. கதழ்வும் துனையும் விரைவின் பொருள’ தொ.சொ.315
இதன் பொருள்:- ‘துனைபரி நிவக்கும் புள்ளின்மான’ எனவும்… விரைவாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு-என்று பதிப்பிக்கப்பட்டுள்ளது.

’துனைபறை நிவக்கும் புள்ளினம் மான’ –மலைபடுகடாம் அடி 55 என்பதே உண்மையான பாடம்.
4. ‘பேநா முருமென வரூஉம் கிளவி
யாமுறை மூன்று மச்சப்பொருள’ தொ.சொ.365
…………..நா நல்லார்’ எனவும் ….. அச்சமாகிய குறிப்பு உணர்த்தும் என்றவாறு என்று பதிப்பிக்கப்பட்டுள்ளது.

     நூற்பாவும் சொற்பிரிப்பின்றிச் சந்தி சேர்த்தே பதிப்பிக்கப்பட்டநிலையில் உரிச்சொல் பேம், நாம், உரும் என்பன நூற்பாவைக் கண்டவுடனேயே அறியும் நிலையில் இல்லை. எடுத்துக்காட்டகிய ‘நாநல்லார்’ என்பதும் மயக்கம் தருவதாகவே உள்ளது.
     எடுத்துக்காட்டு ‘நாமநல்லவரா’ அகம். 72 அடி 14 என்பதாகும். இதனைச் சொல்லதிகார நச்சினார்க்கினியர் உரையாலும் தெளியலாம்.

5. ‘இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும்
உவம மருங்கின் தோன்றும் என்ப’-தொ.பொ. 303.
துனியுறு கிளவிக்குக் ‘கராத்தின் வெய்யவெந் தோள்’ (ஐந்,ஐம். 24) என்பது எடுத்துக்காட்டகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. கராம்-முதலை என்ற அடிக்குறிப்பும் காணப்படுகிறது. சுவடிகளில் காரம் என்பதும் கராம் என்பதும் ஒரே வடிவில் எழுதப்படும் எனினும், இப்பாடலின் ஈற்றடியாகிய இதனை ஈற்றயலடியாகிய ’சார்தற்குச் சந்தனச் சாந் தாயினேம் இப்பருவம். என்பதனோடு கொண்டு நோக்க, ‘காரத்தின் வெய்ய எந்தோள்’ என்பதே உண்மைப் பாடமாகக் கொள்ளத் தக்கமை புலப்படும்.

6. ‘வேறுபட வந்த உவமத் தோற்றம்
கூறிய மருங்கின் கொள்வழிக் கொளாஅல்’-தொ.பொ. 307.
இந்நூற்பா உரையுள் ‘வையுங்காவலர்’ என்ற எட்டாம் புறப்பாடல் இடம் பெறுகிறது. சந்திரனைச் சேரமன்னனோடு ஒப்பிடுவதாகப் பேராசிரியர் கொள்ளும் இப்பாடலில் சந்திரன் விலங்கு செலல் மண்டிலம் என்று குறிக்கப்படவேண்டுவதாகும். சூரியனச் சேரமன்னனோடு ஒப்பிடுவதாகக் கொள்ளும் புறநானூற்று உரைக்குரிய ‘வீங்கு செலல் மண்டிலம்’ என்ற பாடத்தை இங்கும் கொண்டுள்ளமை பொருந்துவதன்று. பல்லாண்டுக்காலம் பண்டிதத் தேர்வுக்குப் பாடம் சொல்லிய பேரறிஞராகிய கணேசையர் பதிப்பின்கண்ணும் மேற்கோள் செய்யுள்களைச் சுட்டுமிடத்து இத்தகைய தவறுகள் நிகழ்கின்றன என்பதைச் சுட்டுவதன் வாயிலாக இலக்கணச்சுவடிகளில் ஆய்வுப்பதிப்பினைக் கொண்டு வருபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கோள் எடுத்துக்காட்டு என்ற நிலையில் வரும் பாடலடிகளைக் கவனிக்கவேண்டும் என்பதனை உணர்கிறோம்.

     நச்சினார்க்கினியர் தொல்காப்பியம், கலித்தொகை, பத்துப்பாட்டு, சீவகசிந்தாமணி என்பனவற்றிற்கு உரைவரைந்த சான்றோராவர். தொல்காப்பிய உரைக்கு ஏனைய மூன்று நூல்களுக்கும் வரைந்த உரை உதவும்.. அவர் இலக்கியத்தில் வரைந்த உரைக்கும், இலக்கணத்தில் வரைந்த உரைக்கும் வேறுபாடு இருக்குமாயின், இலக்கண உரையில் அப்பகுதி வருமிடத்து அவ்வேறுபாட்டை அடிக்குறிப்பில் சுட்டுதல் ஆய்வுப் பதிப்புக்கு இன்றியமையாததாகும்.

     1.நச்சினார்க்கினியர் முல்லை,குறிஞ்சி முதலிய பெயர்கள் உரிப்பொருள் அடியாக ஏற்பட்டவை என்னும் கருத்தினர். அதற்கேற்ப ‘மாயோன்மேய’ தொ.பொ.5.என்ற நூற்பாவுரையுள்,
     இனி முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற முறை
     என்னையெனின். இவ்வொழுக்கமெல்லாம் இல்லறம் பற்றிய
     ஒழுக்கமாதலின், கற்பொடு பொருத்திக் கணவன்
     சொற்பிழையாது இல்லிருந்து நல்லறம் செய்தல் மகளிரது
     இயற்கை முல்லையாதலின் அதுமுற்கூறப்பட்டது. எனவே
     முல்லை என்ற சொற்குப் பொருள் இருத்தலாயிற்று; ‘முல்லை
     சான்ற முல்லையம்புறவின்’ என்பனவாகலின். புணர்தலின்றி
     இல்லறம் நிகழாமையின் புணர்தற்பொருட்டாகிய குறிஞ்சியை
     அதன்பின் வைத்தார். இதற்கு உதாரணம் சிறந்தது. ‘கருங்காற்
     குறிஞ்சிசான்ற வெற்பணிந்து என்பது கரு’
என்று வரும் பகுதியைச் சற்று நோக்கவேண்டும். தாம் கொண்ட கொள்கையை நிறுவுவதற்கு உரிய மேற்கோள் தரும் இடம் இது.

     முல்லைசான்ற புறவணிந்து ஒருசார்-மதுரை– அடி 285
     கருங்கால் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து-மதுரை- அடி 300
     மருதஞ்சான்ற தண்பனை சாற்றி ஒருசார்-மதுரை- அடி 270
     நெய்தல் சான்ற வளம்பல பயின்று-மதுரை- அடி 325
என்ற மதுரைக் காஞ்சியடிகளில் நச்சினார்க்கினியர் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நான்கு சொற்களுக்கும் இருத்தல், புணர்ச்சி, ஊடல், இரங்கல் என்ற பொருள்களே தந்திருப்பதனை நோக்க, ‘இதற்கு உதாரணம் ‘கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து’ என்பது என்பதே நச்சினார்க்கினியர் கருத்தாகிய பாடமாக இருத்தல் வேண்டும். ‘இறந்தது,கரு’ என்ற இரு சொற்களும் ஏடெழுதியோர் பின்னர்ச் சேர்த்த சொற்களாதல் வேண்டும். தொல்காப்பியத்துக் காணப்படும் பொருளும், மதுரைக் காஞ்சியில் காணப்படும் பொருளும் வேறுவேறாயிருப்பதனை ஐயரவரகள் மதுரைக் காஞ்சி 300ஆம் அடி உரையின் அடிக்குறிப்பாகத் தந்திருக்கவும், பொருளதிகார நச்சினார்க்கினியத்தின் பதிப்பாசிரியராகிய கணேசையர் அவர்கள் இதுபற்றி எதனையும் குறிப்பிடாமலும் ‘கருங்காற்குறிஞ்சி சான்றவெற் பணிந்து’ என்பதன் இருப்பிடம் குறிப்பிடாமலும் விடுத்தமை வியப்பாக உள்ளது.

     2. ‘வரைதல் வேண்டித் தோழி செப்பிய
        புரைதீர் கிளவி புல்விய எதிரும்’- தொ. பொ. 107
     புரைதீர் கிளவி-தலைவன் உயர்விற்கு ஓயாது இயற்பழித்து உரைக்கும் கிளவி. அது ‘பாடுகம் வாவாழி தோழி’ என்னும் குறுஞ்சிக்கலியுள் (கலி 41)
     ‘இலங்கும் அருவித்தே…..பொய்த்தான்மலை’ எனத் தோழி இயற்பழித்த வாய்ப்பாட்டான்
வரைவு கடாவ, அதனை உடம்பட்டுப் பழித்தற்கு உடம்படாதான் ‘பொய்த்தற்குரியனோ…..தீத்தோன்றியற்று’ எனத் தலைவி இயற்படமொழிந்து எதிர்மறுத்தவாறு காண்க என்பது நச்சினார்க்கினியர் உரை.

     கலித்தொகை உரையுள் தலைவி இயற்பழித்ததாகவும் தோழி இயற்படமொழிந்ததாகவும் நச்சினார்க்கினியர் உரை செய்துள்ளார். இதுபற்றித் தொல்காப்பிய உரையுள் அடிக்குறிப்பும் எதுவும் இல்லை. நச்சினார்க்கினியர் உய்த்துக் கொண்டுணர்தல் என்ற உத்திவகையான் இருவகையாகப் பொருள் செய்தல் பொருளதிகாரத்திலேயே,
     ‘மாய்பெருஞ்சிறப்பின் புதல்வன் பெயரத்
     தாய்தப வரூஉம் தலிப்பெயல் நிலையும்’ -தொ.பொ. 79
     வருத்த மிகுதி சுட்டுங் காலை
     உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம்’ -தொ.பொ. 226
     உண்டற்குரிய அல்லாப்பொருளை
     உண்டனபோலக் கூறலும் மரபே’ -தொ.பொ. 213
     ’சுரமென மொழிதலும் வரைநிலை இன்றே’ –தொ.பொ; 216
என்றாற் போலக் காணப்படுதலின், வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிரும்’ என்ற தொடருக்கு ‘வரைதல் வேண்டி (தலைவி) செப்பிய புரைதீர் கிளவிக்குத் தோழி புல்லிய எதிரும்’ என்றும் பொருள் கொண்டு தலைவி இயற்பழிக்கத் தோழி இயற்பட மொழிதற்கண்ணும் தலைவியின் கூற்று நிகழும் என்று குறிப்பிடப்பட்ட தொடர் நெகிழ்க்கப்படிருக்கலாம் போலும். பெரும்புலவர்கள் பதிப்பித்த பதிப்புக்களில்கூட விடுபட்டுள்ள இத்தகைய அடிக்குறிப்புகள் இலக்கணச் சுவடிகளின் ஆய்வுப் பதிப்புக்கு இன்றியமையாதவை என்பதனை உணர்கிறோம்.

     இனி, இந்நூற்றாண்டில் வெளிவந்த இலக்கணப் பதிப்புக்கள் முற்பட்ட காலப் பதிப்புக்களைவிடச் செப்பம் மிகுதியும் நிறைந்தவை. இப்பதிப்புக்களில் காணப்படும் நிறுத்தக் குறியீடுகள் பெரிதும் பொருள் தெளிவை நல்குகின்றன. எனினும் சிற்சில இடங்களில் நிறுத்தக் குறியீடுகள் பிறழ இடப்படுவதனால் பொருள் மயக்கம் தருதலையும் காண்கிறோம்.

     யா, பிடா, தளா என்ற பெயர்கள் யாஅங்கோடு, பிடாஅங்கோடு, தளா அங்கோடு என்றாற் போல வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்துமிக்கு முடியும் என்று கூற
     ‘வல்லெழுத்து மிகினும் மானமில்லை’ –தொ. எ. 230. இஃது
     எய்தியது இகந்துபடாமல் காத்தது, அகரத்தோடு
     மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்தும் பெறும் என்றலின் என்று
     நூற்பாவுக்குப் பாயிரம் வரைந்து யா அங்கோடு முதலாக
     எடுத்துக் காட்டும் தந்த நச்சினார்க்கினியர் ‘மானமில்லை.
     என்றதனால் இம்மூன்றற்கும் உருபிற்குச் சென்ற சாரியை (எ.
     173) பொருட்கண் சென்றுழி இயைபுவல்லெழுத்து வீழ்க்க
     யாவின் கோடு, பிடாவின் கோடு, தளாவின் கோடு எனவரும்.
     சாரியை பெறவே அகரம் வீழ்ந்தது. இன்னும் இதனானே யா
     அத்துக்கோடு என அத்துப் பெறுதலும் கொள்க’
என்று குறிப்பிட்டார்.

     யா, பிடா, தளா என்பன ஓரெழுத்து மொழியும் குறியதன்முன்னர்வரும் ஆகார ஈற்று மொழியுமாகும்.
     ‘வேற்றுமைக் கண்ணும் அதனோர்றே’ தொ. எ. 225
     ‘குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும்
     அறியத் தோன்றும் அகரக்கிளவி’ தொ. எ. 226
என்ற நூற்பக்களால் யா, பிடா, தளா என்பன அகரமும் வல்லெழுத்தும் பெற்றுப் புணரும் எனினும் மெல்லெழுத்துப் பெற்றுப்புணர்தல் பெரும்பான்மை. இந்த யா, பிடா தளா என்பன பர்றிய நூற்பாக்களைக் ‘குறியதன் முன்னரும்’என்ற நூற்பாவை அடுத்து வைத்தலே முறை. அங்ஙனம் வையாமல் இரா, நிலா என்பன பற்றிய நூற்பாக்களை அடுத்து அமைத்து இவை பற்றிய நூற்பாக்களைத் தொல்காப்பியனார் பின்னரே அமைத்துள்ளார். இதனை ஒரு காரணமாகக் கொண்டு, இரா, நிலா என்பன இராவிற்கொண்டான், நிலாவிற்கொண்டான் என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்த்தலை ஈண்டுக் குறிப்பிடுகிறார்.

     இந்நூற்பா உரையுள் ‘அகரமும் வல்லெழுத்தும் பெறுதலின், யாமரக்கிளவி என்பதனைக் குறியதன் முன்வரும் என்பதனை பின்னாவையாததனால், இராவிற் கொண்டான், நிலாவிற் கொண்டான் என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க-எனச் சொற்றொடர் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

     கணேசையர் அவர்கள் பதிப்பில் ‘இன்னும் இதனானே யாஅத்துக் கோடு, பிடாஅத்துக் , கோடு, தளா அத்துகோடு என அத்துப் பெறுதலும் கொள்க. அகரமும் வல்லெழுத்தும் பெறுதலின் என்று ஒரு பத்தி அமைக்கப்பெற்று ’யாமரக் கிளவி என்பதனைக் குறியதன் முன்னரும்…..வீழ்க்க …..’என்று காணப்படுகிறது. இத்தகைய நிறுத்தக் குறியீடுகளும் பத்திப்பிரிவும் பொருள் மயக்கம் தருவதனைக் காணலாம்.

     நிறுத்தக் குறியீடுகள் செம்மையாக அமையின் பொருள் தெளிவினைத் தருகின்றமை போலவே தவறாக அமையின் பொருள் மயக்கம் தரும் என்பதற்கு இலக்கணத் தொடர்பான ஒரீரெடுத்துக் காட்டுக்களைக் காண்போம்.

     கலித்தொகையின் அனந்தராமையர் பதிப்பு சான்றோர் பலரும் போற்றும் தகுதிவுடையது.

1. இது நான்குறுப்பான் வந்ததேனும், தேவபாணியான் வருதலின் முதனிலை ஒத்தாழிசையாகாது. ’ஏனை ஒன்றே, தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே என்பதனால் தேவர்ப் பராயிற்றேனும் வண்ணகமுமாகாது எண்ணும் சின்னமும் இழத்தலின் ஆகலின் இஃது என்ணிடையிட்டுச் சின்னம் குன்றிய கொச்சக ஒருபோகுமாயிற்று.

     ’இது நான்குறுப்பான் வந்ததேனும்; தேவபாணியான் வருதலின் முதனிலை ஒத்தாழிசையாகாது; ‘ஏனை ஒன்றே, தேவர்ப்பராஅய முன்னிலைக் கண்ணே’ என்பதனான். என்றே இப்பகுதி நிறுத்தக்குறியேடு அமைக்கப்படல் வேண்டும்.  இது முதனிலை ஒத்தாழிசை ஆகாமைக்குக் காரணம் ‘ஏனை ஒன்றே, தேவர்ப்பராஅய முன்னிலைக் கண்ணே என்பது’. ‘ஏனை….. கண்ணே’ என்பது தேவர்ப் பராஅவுதற்குக் காரணம் அன்று. ஆதலின் நிறுத்தக்குறியீடு தவறிய வழிப்பொருள் புலப்பாட்டில் மயக்கம் உண்டாதல் தேற்றம்.

     ‘இது ஏனை ஒன்று எனப்பட்ட தேவபாணி ஒத்தாழிசையாகலான் உறுப்பு ஒன்றியும் முதனிலை ஒத்தாழிசையாகாது. ‘தொ. பொ. 461. என்ற பேராசிரியர் உரையும் இதற்கு அரண் செய்யும்.
     கலி 52ஆம் பாடலின் நச்சினார்க்கினியர் உரை ஈற்றில் அமைந்ததோர் இலக்கணக்குறிப்பை நோக்குவோம்.

     ‘புதுவை போலும் நின்வரவும் இவள்
     வதுவைநாண் ஒடுக்கமும் காண்குவல்யானே’ –கலி 52-24-25
     உரை:- அதற்குக் காரணம் என்னெனின், அப்பொழுது நீ புதியாய்போல வரும் நின் வரவையும் இவன் கல்யாணத்தில் தோன்றிய நாணால் ஒடுங்கியிருக்கும் ஒடுக்கத்தையும் யான் காண்பேனாதலால் என்றார். ஏகாரம் பிரிநிலை.

     இவர்கள் முன்னர்க் களவொழுக்கம் ஒழுகியவாறும் அக்காலத்து அவன் புதயனாக நடித்தவாறும் இவள் ஒடுங்கியிருந்தவாறும் பிறர் அறியாராகலின், இத்தாழிசைகள் ‘பொழுதும் அறம் காப்பும் என்றிவற்றின்’ என்னும் பொருளியற் சூத்திரத்திற்கூறிய காப்பின் வழுவுணர்த்தியன.

     ‘ஏகாரம் பிரிநிலை, இவர்கள்….. அறியாராகலின் ஏகாரம் பிரிநிலை என்பதற்குரிய காரணத்தை இவன்அறியராகலின் என்ற சொற்றொடர் உணர்த்தின ஆதலின் ஏகாரம் பிரிநிலை என்பதனை அடுத்துக் காற்புள்ளியும், ‘இவன்…..அறியாராகலின்‘என்பதை அடுத்து முற்றுப் புள்ளியும் இடப்பட்டு இவை உரைப்பகுதியை அடுத்த பத்தியாக அமைதல் வேண்டும். இத்தாழிசைகள்…..வழுவுணர்த்தின என்பது தனிச் செய்தியாதலின் அது தனிப் பத்தியாக இருத்தல் வேண்டும்.

     பொருள் புலப்பாட்டிற்கு ஏற்ப நிறுத்தக் குறிகள் வழாது அமைக்கப்பட வேண்டுவதன் இன்றியமையாமை இதுகாறும் விளக்கப்பட்டது.

     இனி மிகுதியும் பழக்கத்திலில்லாத வீரசோழிய நூல் பதிப்புப் பற்றி ஒரு சில நோக்குவோம். பெரும்பான்மையான சுவடிகள் ஒரே சுவடியின் படிகள் ஆதலின் ஒரே வகைப்பட்ட பிழைகள் சுவடிகள் பலவற்றில் காணப்படுகின்றன. 22ஆம் காரிகை முதலடி ‘ஈறாம் லகரம் மதவந் தெதிர்ந்திடில்’
     லகர ஒற்றிற்று நிலைமொழிப் பதத்தின்பின்னர் வருமொழி முதல் மகார நகாரங்கள் வந்து புணர்ந்தால் அந்த லகரமானது னகாரமாம் என்பது உரை.

   ‘லகார இறுதி னகார இயற்றே’ –தொ. எ. 332
   னகார இறுதி வல்லெழுத் தியைவின்
   றகார மாகும் வேர்றுமைப் பொருட்கே’ –தொ.எ. 332
   ‘மெல்லெழுத்தியையின் னகாரமாகும்’ –தொ. எ.336
     என்பதே விதியாகலின் –காரிகையின் முதலடி ‘ஈறாம் லகாரம் மந வந்து எதிர்ந்திடில்’என்றே இருத்தல் வேண்டும். சுவடிகளில் இங்ஙனம் இல்லையே எனது கருதித் தவறான பாட்த்தைத் கொள்ளுதல் ஆராய்ச்சி[ பதிப்பு ஆகாது. காரணம் காட்டித் திருத்தம் செய்வதில் தவறு இல்லை.
     58ம் காரிகை, இக்காரிகையில் ஷகரம் ககரமாதலும், க்ஷ இரு ககரமாதலும், ஷ ஒரோவழி கெடுதலும் ஒரோவழி யகரமாகவும் வகரமாகவும் ககரமாகவும் ஆதலும் கூறப்பட்டுள்ளன.

பரிஷ்காரம்   பரிக்காரம்          ஷ் கெட்டு க் வந்தது
தக்ஷன்       தக்கன்             க்ஷ் கெட்டு இரு ககர ஒற்று வந்தன
ஹரன்       அரன்               ஹ என்ற ஒற்று நீங்கியது.
வைதேஹி   வைதேவி           ஹ் வ் ஆயிற்று
மஹிதலம்   மயிதலம்           ஹ் ய் ஆயிற்று
மஹிமை    மகிமை             ஹ் க் ஆயிற்று

     ‘முதலொற்று இரட்டிற்கும் முப்பத் தொன்றெய்திடின் முன்பின் இஃது ‘முப்பானுறு மூன்றதனுக்கு லோபமும் கவ்வும் அறைவர்களே’ என்று பதிப்பில் உள்ளது.
     உ.வே.சா. நூல்நிலையச் சுவடியில் இக்காரிகையின் முதலடி, ‘முதலொற்று இரட்டிக்கும் முப்பத்தொன்றெய்திடில், முப்பத்தொன்றே’ என்று உள்ளது.

     உடையில் 35 ஆம் எழுத்தாகிய க்ஷ என்பதும் குறிக்கப் பெற்றிருத்தலானும் அதனைக் கூறாவிடுத்தல் குன்றக் கூறலாமாகலானும் காரிகை ‘முதலொற்றி ரட்டிக்கும் முப்பத் தொன்றைந் தெய்தின் முப்பத்தொன்றே’ என்று முதலடியைக் கொண்டிருத்தல் வேண்டும். ஹ் – வ் ஆதலுக்கு எடுத்துக்காட்டு உள்ளதால் – ஈற்றடியில் – யவ்வொரு என்பது யவ்வொடு என்றே இருத்தல் வேண்டும். அதற்கேற்பக் காரிகையின் ஈற்றடி ‘மூப்பானுறுமூன்றதனுக் குலோபமும் யவவொடு கவ்வு மறைவாறெ’ எனக் காரிகை யாப்பிற்கு ஏற்ப அமைந்ததாதல் வேண்டும்.

     சுவடிகளில் முழுமையாகக் காணப்படாவிடினும் உரை, எடுத்துக்காட்டு இவற்றை நோக்கிக் காரணம் காட்டிக் காரிகையைச் செப்பம் செய்து கோடல் தவறில்லை. இதுவும் ஆராய்ச்சிப் பதிப்புக்கு ஏற்றதே.

     தேற்றுதல் என்ற சொல் தெளிவித்தல் பொருளிலும், தெற்றுதல் என்ற சொல் மாறுபாடுதல் பிழை செய்தல் முதலிய பொருள்களிலும் வருவதனைக் காண்கிறோம். எனவே பிழைசெய்தல் என்ற பொருளைக் குறிக்குமிடத்து இருப்பது பிழையாகும். சுவடிகளில் தெற்றுதல், தேற்றுதல் இரண்டும் ஒரே வடிவினவாக எழுதப்பட்டிருத்தலின் பொருள் நோக்கத் தெற்றுதல் என்ற சொல்லையே கோடல் வேண்டும். எனவே 82 ஆம் காரிகையில்

   ‘ஈரெட்டு மூவைந்து மாமுடல் தேற்றவும், ஈற்றுவன்ணம்
   தே ரிட்டு மூன்றா முடலொடு தேற்றவும்
   என்ற பகுதியில் ஈரிடத்தும் தெற்றவும் எனவே பாடம்
   கொள்ளப்படல்வேண்டும்.

காரிகை எண். 101.
   ‘பிண்டம் மேய பெருஞ் சோற்று நிலையும் வென்றோர் விளக்கமும்
   தோற்றோர் தேய்வும்
        குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்’ – தொ. பொ. 63.3
   என்பதனை உட்கொண்டு.
     ‘நிரவும் வழிவொடு சோற்றுநிலை கொற்றவர் மெலிவு’ என்ற அடி அமைக்கப்பட்டுள்ளது.
‘கொற்றவள்ளையாவது பகைவர்நாடு அழிதற்கிரங்கித்
தோற்றோனை விளங்கக் கூறும் வள்ளைப்பாட்டாகும் (நச்)
தொல்காப்பிய அடிகளை நோக்க 101 ஆம் காரிகையின் மூன்றாமடி ‘நிரவும் அழிவோடு தோற்றுநிலை தோற்றவர் மெலிவு’ என்றே இருத்தல் வேண்டும். இத்தகைய சிறுபிழைகள் ஏடெழுதுவோரால் ஏற்பட்டிருத்தல் இயல்பு ஆதலின், இத்தகைய பிழைகளைக் காரணம் காட்டி நீக்குதற்கண் தவறு இல்லை. 116 ஆம் காரிகை உரை
     அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவிற்கு உறுப்பாகிய தரவு அளவடியான் வரும். பிறபாவின் தரவிற்கு அடிவரையறை இல்லை.

     யாப்பருங்கலக் காரிகைச் செய்தியை ஒட்டி அளவடியான் என்பது ஆறடியான் என்றே இருத்தல் வேண்டும். எடுத்துக்காட்டுப் பாடல்கள் மூன்றும் ஆறடித்தரவு உடையனவாயிருத்தலும் இத்திருத்தத்துக்கு அரண் செய்யும்.

     யாப்பருங்கலக் காரிகைக்குப் பின்னர்த் தோன்றிய வீரசோழியச் செய்யுளியலில் ‘இருமூன்றடியே, தரங்கக்கும் வண்ணகக்கும் தரவாவது’ – காரிகை 42

     இங்ஙனம் வீரசோழிய எடுத்துக்காட்டுப் பாடல்கள் பல பெருந்தொகையில் காணப்படும் திருந்திய பாடங்களால் திருத்திக் கொள்ளப்படும் நிலையில் உள்ளன. ஒரு சில நோக்குவோம்.

     118 ஆம் காரிகை உரை
   திருந்திலைய இலங்குவேல் திகழ்தண்தார்க் கதக்கண்ணன்
   விரிந்திலங்கும் அவிர்பைம்பூண் தடமார்பன் வியன்களத்து
   முருந்திறைஞ்சு முத்திற்கு முட்டியெல்லாம் தனித்தனியே
   அருந்திறல்மா மாமன்னர்க்(கு) அழுவனவும் போன்றனவே.
   முரிந்திறைஞ்சு முத்துதிர்க்கும் முடியெல்லாம் தனித்தனியே –
                                           பெருந்தொகைப் பாடம்
   அடலமுங் கழற்செவ்வேல் அலங்குதார்ச் செம்பியன்றன்
    கெடலருங் கிளர்வேங்கை எழுதத்தம் உயிரோம்பாது
    உடல்சமத்துக் குத்தெரிந்த ஒன்னாப்பல் லரசர் தம்
    கடகஞ்சேர் திரள்முன்கை இற்றோட வைசினவே
    அடல்வணங்கு அழற்செவ்வேல் அலங்குதார்ச் செம்பயன்றன்
    கெடலருங் கிளர்வேங்கை எழுதித்தம் உயிரோம்பாது
    உடல்சமத்துக் குருத்தெழுந்த ஒன்றாப்பல்லரசர் தம்
    கடகஞ்சேர் திரள்முன்கை கயிற்றோடும் வைகினவே
                                     -பெருந்தொகையின் பாடம்
        அருமொழிதன் கோயில் அடலாரசர் பிண்டித்
        திருமகட்குக் கொடிகள் தேய்த்த –பருமணிகள்
        ஒத்த தமுதனைய ஒண்ணுதலார் மென்மலராம்
        பாதத்தி னூன்றும் பரல்
        திருமருட கொடிகள் தேய்த்த -           -பெருந்தொகையின் பாடம்
   
இங்ஙனம் பிற நூல்களால் திருந்தக்கூடிய பாடங்கள் வீரசோழியத்தில் பல உள.
       115 ஆம் காரிகை உரை எடுத்துக்காட்டு
     இந்திரன் ஏறக் களிறிந் தனரே, முத்திகழ்ப் பூவின் முடிசூ டினரே
     மந்திரக் கோடி மனத்தளித்தனரே, சுந்தரக் கோபுரச் சுருதிவாய்
     மையரே
     முந்திகழ்ப் பூவின் முடிசூட்டினரே, மந்திரக் கோடி
     மணத்தளித்தனரே, சுந்திர சோழச் சுருதிவாய்மையரே
       என்ற பாடங்கள் ஏடெழுதுவோரால் பிறழப் படித்து முன்கண்டவாறு எழுதப்பட்டிருத்தல் கூடும்.  சோழ என்பதனைக் கோபுர எனப் பிறழ உணர்தல் எழுத் தமைப்பைப் படிக்கும்போது ஏற்படக்கூடியதே.

       இங்ஙனமே வீரசோழியப் பொருட்படலத்து உரையில் காணப்படும் குறிஞ்சி நடையியல் என்ற நீண்ட பாடலிலுள்ள செய்திகள் பிறழ்ந்து இருத்தலும் குறிஞ்சி நடையியற்செய்திகள் நெய்தல் நடையியற் செய்திகளோடு மயங்கியிருத்தலும் கூர்ந்து நோக்கின் புலப்படும். ஆய்வுப் பதிப்பில் இவற்றை முறைப்படுத்தி அமைக்கவேண்டுதலும் ஒரு கடப்பாடாகும். சுவடிகளில் காணப்படாவிடினும் பொருள் பொருத்தம் நோக்கி மாற்றிப் பதிப்பித்தலும் இன்றியமையாதது என்பதற்கு இஃது ஓர் எடுத்துக்காட்டு. இங்ஙனமே 119 ஆம் காரிகை உரையுள் காணப்படும் கூன் பற்றிய செய்திகள் யாவும் கூன்பற்றிக் குறிப்பிடும் 120 ஆம் காரிகை உரையுள் இடம் பெறல் வேண்டும்.

முடிப்புரை

     பெரும்பான்மையவாகிய இலக்கண நூல்கள் ஓரளவு செப்பம் செய்யப் பெற்றுப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், சிந்தாமணி, பெருங்கதை, மணிமேகலை முதலிய சிறந்த இலக்கியங்களும் நல்ல பதிப்புக்களைப் பெற்றுள்ளன. இலக்கணச் சுவடிகளின் ஆய்வுப் பதிப்புக்கு இவையாவும் துணை செய்வன.

     பழைய ஏட்டுச் சுவடிகளை மட்டும் கருத்தில் கொண்டு ஆய்வுப்பதிப்பினைக் கொண்டுவருதல் பொருத்தமாகத் தெரியவில்லை. நூற்செய்திகள், எடுத்துக்காட்டுக்கள், மேற்கோள்கள் முதலியன காணப்படும் பிற நூல்களின் துணையையும் முழுமையாகக் கோடல் வேண்டும். சுவடிகளில் வெளிப்படையாக நமக்கு பிழை என்று புலப்படும் பாடவேறுபாடுகளைக் குறிக்கவேண்டிய தேவை இல்லை. தெளிவையும் எளிமையையும் கருதிச் சொற்றொடர்களைத் தேவையான அளவு பிரித்தே குறிப்பிடுதல் வேண்டும். சுருங்கக் கூறின் இலக்கண ஆய்வுப்பதிப்புக்கு உரியவை :-

     1.  விரிவான பதிப்புரையில் அப்பதிப்பின் தேவையும் அதற்கு மேற்கொள்ளப்பட்ட   வழிமுறைகளும் பயன்பட்ட நூல்கள் பற்றிய செய்திகளும் இடம்பெறல்வேண்டும்.

2.  அடுத்து ஆசிரியர் வரலாறு, உரையாசிரியர் வரலாறு, உரைநயங்கள் என்பன   பெரும்பாலும் அகச் சான்றுகள் கொண்டு வரையப்படல்வேண்டும்.

3.நூலாராய்ச்சி என்ற தலைப்பில் பழைய பாடங்களை விடுத்துப் புதிய பாடங்கள் கொள்ளப்பட்ட காரணங்களும், அந்நூல் உரை இவற்றால் அறியப்படும் சிறப்பான செய்திகளும் இடம்பெறல் வேண்டும்.

4. நூற்பாக்களுக்குச் சுருக்கமாகவும் தெளிவாகவும் தலைப்பு அமைத்தல்வேண்டும்.

5. நூற்பாவை அடுத்து நூற்பாப் பாயிரம், பதவுரை அல்லது பொழிப்புரை எடுத்துக்காட்டு விளக்கவுரை முதலியன தனித்தனிப் பத்திகளில் பொருத்தமான நிறுத்தக் குறியீடுகளுடன் அமைக்கப்படல் வேண்டும்.

6. எடுத்துக்காட்டுப் பாடல்கள் இயன்றவரை இடம் சுட்டப்படல்வேண்டும். அவை எந்நூலைச் சேர்ந்தன முன்பது புலப்படாதவிடத்து அவை எடுத்துக்காட்டப் பட்டுள்ள பிறநூல்கள் பற்றிய குறிப்பு உளவாயின் அவை அடிக்குறிப்பில் இடம் பெறல்வேண்டும்.

7. பெயர் சுட்டப்படாமல் மறுக்கப்பட்ட கருத்துக்கள் யாருடையன, அவை எங்கு உள்ளன என்பனவும், அடிக்குறிப்பில் இடம் பெறல் வேண்டும்.

8. நூற்பா அகரவரிசை,எடுத்துக்காட்டுப் பாடல்கள் அகரவரிசை, எடுத்துக்காட்டுச் சொற்கள் சொற்றொடர்கள் அகரவரிசை மேற்கோள் அகரவரிசை முதலியன எஞ்சாது நூல் இறுதியில்காணப்படல் வேண்டும்.

9. தேவைப்படும் என்று கருதப்படின் ஒவ்வொரு நூற்பாவை அடுத்தும் அதன் விளக்கமும் அதனை ஒத்த பிறநூல்களின் நூற்பாக்களும் குறிப்பிடலாம். அளவு பல்கும் என்ற கருத்தால் இவை நீக்கப் படுதலும் கூடும்.

10.நூல் நல்ல காகிதத்தில் தெளிவான எழுத்துக்களைக் கொண்டு, நூற்பா உரை அடிக்குறிப்பு இவற்றுக்குத் தனித்தனி எழுத்துக்களைப் பயன்படுத்தி அச்சிடப் படல் வேன்டும்.

     பெரும்பாலும் இவை யாவும் நிறைவுறப் பெற்ற உ.வே.சா. அவர்களின் நன்னூல் சங்கரநமசிவாயர் உரை இரண்டாம் பதிப்பு, இலக்கணச் சுவடிகளின் ஆய்வுப் பதிப்புக்கு முன்னோடியாகக் கொள்ளத்தகும். பழுத்த புலமையும், நிறைந்த ஆர்வமும், சலியாத உழைப்பும் பதிப்பும் சிறப்புற உதவும் என்பது வெளிப்படை.

திருக்குறள் பதிப்புக்கள்

1812- தஞ்சை ஞானப்பிரகாசம்
1838-திருத்தணிகை சரவணப்பெருமாளையர்
1840-இராமாநுசக் கவிராயர்
1842-மழவை மகாலிங்க அய்யர்
1849-களத்தூர் வேதகிரி முதலியார்
1851- ஆறுமுக நாவலர்
1859 -ஊ.புஷ்பரதச் செட்டியார்
1863- முனிசாமி முதலியார்
1870- இட்டா குப்புசாமி நாயுடு
1885- முருகேச முதலியார்
1889- சுகாத்தியர்( ஸ்காட்) (மரபுக்கு மாறான பதிப்பு)
12.0 இடைச் செருகல்:

பேரிலக்கியங்கள் எனில் அவற்றில் இடைச் செருகல்கள் இருத் தல் இயற்கையாக உள்ளன. திருத்தொண்டர் புராணமும் இதற்கு விலக்கன்று. புலவர் சபாபதி முதலியார் அவர்களின் பதிப்புக்கள் இரண்டனுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு எண்ணிக்கை காணப்படு கின்றது. ஒன்றில் 4299 என்று உள்ளது. மற்றொன்றில் 4300 என்று உள்ளது.
எனினும், சிவக்கவிமணி அவர்கள் இவை தவறெனக் குறித் துள்ளார்கள். ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் பதிப்பிலும், ஆறுமுக நாவலர் பதிப்பிலும் 4286 பாடல்கள் உள்ளன. பின்வந்த பதிப்புக்கள் பலவற்றிலும் இவ்வெண்ணிக்கையே உள்ளது.
`சேக்கிழார் புராணம்' அல்லது `திருத்தொண்டர் புராண வரலாறு' எனப்படும் நூலைச் செய்தருளியவர் உமாபதி சிவசாரியார் ஆவர். இந்நூலில் திருத்தொண்டர் புராணத்தில் உள்ள காண்டம், சருக்கம், பாடல்கள் ஆகியவற்றைத் தாம் கண்டவாறு எடுத்துக் கூறிப் போற்றியுள்ளார். அவ்வகையில், அந்நூற்கண் திருத்தொண்டர் புராணத்தில் காணும் பாடல்கள் 4253 எனக் குறிக்கின்றார். இதற்கு அரணாகப் பழைய ஏட்டுச் சுவடிகளுள் ஒன்றன் இறுதியில்,
கொண்டலணி தண்டலை சூழ் குன்றை நகர்ச் சேக்கிழார்
ஒண்டரணி யோருய்ய வோதினார்-கொண்ட புகழ்
என்றதொரு நாலாயி ரத்திருநூற் றைம்பத்து
மூன்று திருவிருத்த மும். -சேக்கிழார் புராணம்
என்றொரு பாடலும் உள்ளது.
இவ் வெண்ணிக்கையே கொள்ளத்தக்கது என்பது சிவக்கவி மணியவர்கள் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் கருத்தாகும். இவ் வகையில் (4286-4253=33) 33 பாடல்கள் மிகையென அறிய இயலுகின்றது. சேக்கிழார் திருவாக்காக இருந்து, அதனைக் கழித்து விடின் பெரும் தவறாகுமே என்ற அச்ச உணர்வும், ஆழ்ந்த நுண்ணறி வும் கொண்ட சிவக்கவிமணி அவர்கள், பின்வரும் 33 பாடல்கள் இடைச் செருகலாய் இருக்குமோ என ஐயுறுகின்றார்.
1. திருமலைச் சிறப்பு = பாடல்-8
2. கண்ணப்பர் = பாடல்கள் 158 முதல் 162 வரை
3. ஆனாயர் = 9; பாடல்-19
4. மூர்த்தியார் = 9; பாடல்கள் 29-30
5. திருக்குறிப்புத் தொண்டர் = 9; பாடல்கள் 99,100,101
6. திருநாவுக்கரசர் = 9; பாடல்-356.
7. திருஞானசம்பந்தர் = 9; பாடல்கள் 466, 705, 715,716, 734, 735, 812
8. ஏயர்கோன் = பாடல்கள்34,122
9. சாக்கியர் = 9; பாடல்-7
10. கலியர் = 9; பாடல்-2
11. பரமனையே பாடுவார் = முதற்பாடல்
12. திருவாரூர்ப் பிறந்தார் = 9; முதற்பாடல்
13. முப்போதும் திருமேனி = 9; பாடல்-3
தீண்டுவார்
14. முழுநீறு பூசிய முனிவர் = பாடல்கள் 1 முதல் 5 வரை
15. பூசலார் = 9; முதற்பாடல்
இவ்வாறு ஐயுறத்தகும் 33 பாடல்களில் 12 பாடல்கள் நுண்ணி தாக எண்ணின், அவை இடைச் செருக்கலாக இருக்கும் என்றே தோன்றுகின்றன. அப்பாடல்கள்:
பொருப்பினில்வந் தவன்செய்யும் பூசனைக்கு முன்பென்மே
லருப்புறுமென் மலர்முன்னை யவைநீக்கு மாதரவால்
விருப்புறுமன் பெனும்வெள்ளக் கால்பெருகிற் றெனவீழ்ந்த
செருப்படியவ் விளம்பருவச் சேயடியிற் சிறப்புடைத்தால்.
உருகியவன் பொழிவின்றி நிறைந்தவவ னுருவென்னும்
பெருகியகொள் கலமுகத்திற் பிறங்கியினி தொழுகுதலா
லொருமுனிவன் செவியுமிழு முயர்கங்கை முதற்றீர்த்தப்
பொருபுனலி னெனக்கவன்றன் வாயுமிழும் புனல்புனிதம்.
இம்மலைவந் தெனையடைந்த கானவன்ற னியல்பாலே
மெய்ம்மலரு மன்புமேல் விரிந்தனபோல் விடுதலாற்
செம்மலர்மே லயனெடுமான் முதற்றேவர் வந்துபுனை
யெம்மலரு மவன்றலையா லிடுமலர்போ லெனக்கொவ்வா.
வெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ வெனுமன்பா
னையுமனத் தினிமையினி னையமிக மென்றிடலாற்
செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியி
லெய்யும்வரிச் சிலையவன்றா னிட்டவூ னெனக்கினிய.
மன்பெருமா மறைமொழிகண் மாமுனிவர் மகிழ்ந்துரைக்கு
மின்பமொழித் தோத்திரங்கண் மந்திரங்க ளியாவையினு
முன்பிருந்து மற்றவன்தன் முகமலர வகநெகிழ்ந்த
வன்பினினைந் தெனையல்லா லறிவுறா மொழிநல்ல.
(தி.12 பு.10 பா.158-162)
நீலமா மஞ்ஞை யேங்க நிரைக்கொடிப் புறவம் பாடக்
கோலவெண் முகையேர் முல்லை கோபம்வாய் முறுவல் காட்ட
வாலுமின் னிடைசூழ் மாலைப் பயோதர மசைய வந்தான்
ஞாலநீ டரங்கி லாடக் காரெனும் பருவ நல்லாள்.
(தி.12 பு.14 பா.19)
எல்லா முடைய வீசனே இறைவ னென்ன வறியாதார்
பொல்லா வேடச் சாக்கியரே யாகிப் புல்ல ராகுவா
ரல்லார் கண்டர் தமக்கிந்த வகில மெல்லா மாளென்ன
வல்லா ரிவரவ் வேடத்தை மாற்றா தன்பின் வழி நிற்பார்.
(தி.12 பு.34 பா.7)
ஆதார மாயனைத்து மாகி நின்ற
வங்கணனெம் பெருமானீ ரணிந்த வேணிக்
காதார்வெண் டிருக்குழையா னருளிச் செய்த
கற்பமநு கற்பமுப கற்பந் தானா
மாகாதென் றங்குரைத்த வகற்ப நீக்கி
யாமென்று முன்மொழிந்த மூன்று பேத
மோகாதி குற்றங்க ளறுக்கு நீற்றை
மொழிவதுநம் மிருவினைகள் கழிவ தாக.
அம்பலத்தே யுலகுய்ய வாடு மண்ண
லுவந்தாடு மஞ்சினையு மளித்த வாக்க
ளிம்பர்மிசை யனாமயமா யிருந்த போதி
லீன்றணிய கோமயமந் திரத்தி னாலேற்
றும்பர்தொழ வெழுஞ்சிவமந் திரவோ மத்தா
லுற்பவித்த சிவாங்கிதனி லுணர்வுக் கெட்டா
எம்பெருமான் கழனினைந்தங் கிட்ட தூநீ
றிதுகற்ப மென்றெடுத்திங் கேத்த லாகும்.
ஆரணியத் துலர்ந்தகோ மயத்தைக் கைக்கொண்
டழகுறநுண் பொடியாக்கி யாவின் சுத்த
நீரணிவித் தத்திரமந் திரத்தி னாலே
நிசயமுறப் பிடித்தோம நெருப்பி லிட்டுச்
சீரணியும் படிவெந்து கொண்ட செல்வத்
திருநீறா மநுகற்பந் தில்லை மன்றுள்
வாரணியு முலையுமையாள் காண வாடும்
மாணிக்கக் கூத்தர்மொழி வாய்மை யாலே.
அடவிபடு மங்கியினால் வெந்த நீறு
மானிலைக ளனறொடக்க வெந்த நீறு
மிடவகைக ளெரிகொளுவ வெந்த நீறு
மிட்டிகைகள் சுட்டவெரி பட்ட நீறு
முடனன்றி வெவ்வேறே யாவி னீரா
லுரைதிகழு மந்திரம்கொண் டுண்டை யாக்கி
மடமதனிற் பொலிந்திருந்த சிவாங்கி தன்னால்
வெந்ததுமற் றுபகற்ப மரபி னாகும்.
இந்தவகை யாலமைத்த நீறு கொண்டே
யிருதிறமுஞ் சுத்திவரத் தெறித்த பின்ன
ரந்தமிலா வரனங்கி யாறு மெய்ம்மை
யறிவித்த குருநன்மை யல்லாப் பூமி
முந்தவெதி ரணியாதே யணியும் போது
முழுவதுமெய்ப் புண்டரஞ்சந் திரனிற் பாதி
நந்தியெரி தீபநிகழ் வட்ட மாக
நாதரடி யாரணிவர் நன்மை யாலே.
(தி.12 பு.63 பா.1-5)
இவை இப்பதிப்பில் நீக்கப் பெற்றுள்ளன. எனினும், இப்பாடல் களும் எஞ்சிய 21 பாடல்களும் திருவருள் துணை கொண்டு மேலும் எண்ணித் துணிய இடனுண்டு.
12.1 சேக்கிழார்: இவ்வரும் பெரும் நூலை அருளியவர் அருள்மொழித் தேவர் ஆவர். சேக்கிழார் குடியினர்; காலப் போக்கில் குடிப்பெயரே நெடிது நின்று நிலவுவதாயிற்று. இவர் இளவல் பாலறாவாயர் என்பார். சேக்கிழார்தம் மதி நுட்பம் நூலோடுடைய பேரறிவைக் கண்ட அக்காலச் சோழப் பெருவேந்தராய `அநபாய சோழர்' இவரை முதலமைச்சராக ஏற்றார். இவர்தம் ஆற்றலும், சால்பும், கண்ட அவ்வரசர் `உத்தம சோழப் பல்லவராயன்' என்ற பட்டமும் வழங்கிச் சிறப்பித்தார்.
தம் அரசர் உயிர்க்குறுதி பயக்கும் நூல்களைக் கல்லாது, சிற்றின்பம் வெஃகுதற்கு ஏதுவாய சிந்தாமணியைப் பயின்றுவர, உறுதி உழை இருந்தான் கூறல் கடன் என்பதற்கு ஏற்ப, அந்நூலை விடுத்து, ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கூறுவதாய அருள் நூல்களைக் கேட்டுப் பயன்பெறுதல் தக்கதெனக் கூறி, ஆளுடைய நம்பிகள் தொகுத்தும், நம்பியாண்டார் நம்பிகள் வகுத்தும் அருளியிருக்கும் அடியவர் வரலாறுகளைக் கூறக் கேட்ட அரசரும் மகிழ்ந்து, அவ்வரலாறுகளைக் காவியமாக அருள வேண் டச், சேக்கிழாரும் தில்லைக்குச் சென்று, பெருமானை வணங்கக் கூத்தப் பெருமானும் வானொலிவழி `உலகெலாம்' என அடியெடுத் துக் கொடுப்ப, அவ்வருள் மொழியையே முதற் பொருளாகக் கொண்டு, இவ்வரிய வரலாற்றைச் செய்தார். அரசரும் அங்கு வந்து மிக மகிழ்ந்து, ஆசிரியர் பெருமானாரையும் அவர் அருளிய நூலை யும் யானை மீது ஏற்றி, நகர்வலம் கொளச் செய்து, தொண்டர் சீர்பரவு வார் என்பதொரு பட்டமும்கொடுத்து, பொன்முடிசூட்டிப் போற்றி மகிழ்ந்தனர். திருவருளில் திளைத்து நின்ற இவர் தில்லையிலேயே இருந்தருளி வீடுபேறு பெற்றனர்.
சேக்கிழார் அமைச்சராகப் பணிசெய்து வரும் பொழுது, திரு நாகேச்சுரத்துப் பெருமானிடத்து அயரா அன்பு கொண்டதன் வாயி லாக அத்திருக்கோவிலுக்குப் பற்பல திருப்பணிகள் செய்து வந்தார். இவ் வன்பு மீதூர்வால், தம் ஊராகிய குன்றத்தூரிலும், திருநாகேச் சுரத்து இறைவரின் நினைவாகத் திருக்கோவில் ஒன்று சமைப்பித்து, அதற்குத் திருநாகேச்சுரம் என்று பெயரிட்டு, அத்திருக்கோவிலுக்கு, நாள் வழிபாடும், சிறப்பு வழிபாடும் வழிவழியாக நடந்துவர அறக்கட் டளைகளையும் அமைத்தார்.
12.2 காலம்: ஆசிரியர் சேக்கிழார் காலம்பற்றி மூவகைக் கருத் துகள் நிலவுகின்றன. 1. கங்கை கொண்ட சோழன் காலத்தவர் (கி. பி. 1030 - 1045); 2. முதற் குலோத்துங்கன் காலத்தவர் (கி. பி. 1073 - 1118); 3. இரண்டாம் குலோத்துங்கன் காலத்தவர்(ி. பி. 1123 - 1148)
சேக்கிழார், தம் காலத்து வாழ்ந்த அரசரை அநபாயன், அபயன் என்ற பெயர்களாலும், குலோத்துங்கன் என்ற பெயராலும் குறிக்கின் றார். அன்றியும், அப்பேரரசர் பேரம்பலத்திற்குப் பொன்வேய்ந்தார் என்றும் குறிப்பிடுகின்றார். இப்பெயர்கள் எவையும் கங்கை கொண்ட சோழற்கு இல்லை. இவ்வரிய திருப்பணியையும் அவர் செய்திலர். ஆதலின் சேக்கிழார், கங்கை கொண்டசோழன் காலத்தவர் அல்லர்.
இனி முதற்குலோத்துங்கனுக்கும் அநபாயர் என்ற பெயர் இருந் ததாகத் தெரிந்திலது. அவரைப்பற்றி எழுந்த கலிங்கத்துப் பரணி யிலும், இவர் பெயர் பலவாகக் குறிப்பிட்டு இருக்க, இவ்வநபாயர் என்ற பெயர் யாண்டும் காணப்படவில்லை. மேலும் இவ்வரசர் தில் லைச் சிற்றம்பலத்திற்கு மட்டுமே பொன் வேய்ந்தவர் ஆதலின், சேக் கிழார் குறிக்குமாறு பேரம்பலத்திற்குப் பொன்வேய்ந்த அநபாயர் இவரின் வேறாவர் என்பதுதெளிவாகிறது.
சேக்கிழார், தம்கால எல்லையில் வாழ்ந்திருந்த சோழரை அநபாயர் என்ற பெயரில் பத்து இடங்களில் குறித்தருளுகின்றார். இவற்றுள் ஓரிடத்துச் `சேயவன் திருப்பேரம்பலம் செய்ய, தூய பொன்னணி சோழன்.....அநபாயன்' என்று குறிக்கின்றார். எனவே, இப்பெயருக்கும் இத்திருப்பணிக்கும் உரிய அரசன் இரண்டாம் குலோத்துங்கனே என அறிய இயலுகின்றது. எனவே இவர்தம் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு ஆகும் என்பது தெளிவு. இவ்வரசர் சிற்சில நிலங்களைத் தொகுத்து அவற்றிற்குக் `குலோத்துங்க சோழ திருநீற்றுச் சோழன் நல்லூர்', `குலோத்துங்கசோழன், திருத்தொண்டர் சீர் பரவு வார்' எனும் பெயரும் வழங்கிச் சிறப்பித்துள்ளமையும் குறிக்கத் தக்கதாம்.
சேக்கிழாரின் இளவல் பாலறாவாயர் குன்றத்தூரில் தம் பெயரால் திருக்குளம் ஒன்று வெட்டியும், அரசர் வேண்டுகோளால், அங்கிருந்தவாறே அவருக்கு உறுதுணையாய் நாட்டைப் பேணியும் வந்தார். இவ்வரசர் அவருக்குத் `தொண்டைமான்' என்றொரு பட்டம் வழங்கிச் சிறப்பித்தமையும் அறிய இயலுகின்றது. இவை யெல்லாம் மேற்கண்ட கால எல்லையில் சேக்கிழார் வாழ்ந்தமைக்கு அரணா கின்றன.
உமாபதி சிவம் என்பவரால் அருளப்பெற்ற திருத்தொண்டர் புராண வரலாறே, இவர் வரலாற்றை ஓராற்றான் அறியத் துணை நிற்கின்றது. இவ்வாசிரியர் புறச் சந்தான குரவர்களில், நான்காம வராய உமாபதி சிவமாவர் என்று கூறலே இதுகாறும் மரபாய் இருந்து வந்தது. இக்கால ஆய்வாளர்கள் அவரின் வேறாவர் என்று கருதுகின் றனர். எவ்வாறாயினும் சேக்கிழார் வரலாற்றை இவ்வளவில் அறிதற்கு ஈதொன்றே நிலைக்களனாக உள்ளது.
12.3 நூற்பெயர்: இவ்வரிய நூற்கு ஆசிரியர் இட்ட பெயர் `திருத்தொண்டர் புராணம்' என்பதேயாம். எனினும் `எடுக்கு மாக்கதை' (தி.12 பாயிரம்,3) எனவரும் தொடர்கொண்டு இதற்குப் பெரியபுராணம் என்பதொரு பெயரும் காலப்போக்கில் வழங்கலா யிற்று. மா-பெரிய, புராணம்-கத. இப்பெயரே இன்றைய நிலையில் பெரிதும் வழக்காறாகவுள்ளது.
12.4 அரங்கேற்றம்: இப்பெரு நூலை `அநபாயனின் அரசவை ஏற்றது' என்பதற்கும், கூத்தப் பெருமான், வான்வழி `உலகெலாம்' என அடியெடுத்துக் கொடுத்தருளிய அருளிப்பாடே, இந்நூல் செயற்கு ஏதுவாயிற்று என்பதற்கும்,
மேய இவ்வுரை கொண்டு விரும்புமாம்
சேய வன்திருப் பேரம்ப லம்செய்ய
தூய பொன்னணி சோழன்நீ டூழிபார்
ஆய சீர்அந பாயன் அரசவை. (தி.12 பாயிரம்,8)
அருளின் நீர்மைத் திருத்தொண் டறிவரும்
தெருளில் நீரிது செப்புதற் காம்எனின்
வெருளில் மெய்ம்மொழி வான்நிழல் கூறிய
பொருளின் ஆகும் எனப்புகல் வாம்அன்றே. (தி.12 பாயிரம்,9)
எனவரும் சேக்கிழாரின் திருவாக்குகள் சான்றாகின்றன.
இவ்வரிய நூலைத் தெய்வச் சேக்கிழார், தில்லையில், சித்திரைத் திருவாதிரை நாளான 4.4.1139இல் தொடங்கி, எதிராண்டு சித்திரைத் திருவாதிரை நாளான 22.4.1140இல் முற்றுவித்தார் என்பர், ஆய்வா ளர் குடந்தை நா. சேதுராமன் அவர்கள்.
12.5 பதிப்புக்கள்: இத் திருத்தொண்டர் புராணம் இதற்கு முன், மூலமாகவும் குறிப்புரையுடனும் உரையுடனுமாகப் பல பதிப்புக்கள் வந்துள்ளன. உரையுடன் வந்தனவற்றில், நிறைவு பெற்றும் பெறாதது மாக இருநிலையில் வெளிவந்துள்ளன. அவை யாவும் ஈண்டு நினைவு கூர்தற்குரியன.
12.5.1 மூலமாக வந்த பதிப்புக்கள்:
() காஞ்சி சபாபதி முதலியார் பதிப்பு: ஆராய்ச்சி முன்னுரை யுடன், முதற் பகுதி - கி. பி. 1854, இரண்டாம் பகுதி - கி. பி. 1862.
() ஆறுமுக நாவலர் வரலாற்றையொட்டிய பதிப்பு, முன் குறிப்புகளுடன் (சூசனம்), காரைக்காலம்மையார் வரலாறு வரை - கி.ி 1884.
() சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றப் பதிப்பு - .பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் ஆராய்ச்சி முன்னுரை யுடன் கி. பி. 1930.
() திருப்பனந்தாள் - காசித் திருமடத்துப் பதிப்பு - கி. பி. 1950.
()திருவாவடுதுற ஆதீனப் பதிப்பு - கி. பி. 1988.
() ஆறுமுக நாவலர் அவர்கள் சூசனம் எழுதாத எஞ்சிய பகுதிகளுக்கு, யாழ்ப்பாணம், ஏழாலை, பண்டிதர் மு. கந்தையா அவர் கள், வரலாற்றை ஒட்டிய முன் குறிப்புகளுடன் (சூசனம்) எழுதி வெளிவந்த மலேசிய, சைவசித்தாந்த நிலையப் பதிப்பு - கி. பி. 1993.
12.5.2 குறிப்புரையுடன் வந்த பதிப்புக்கள்:
() திரு. வி. . அவர்களின் குறிப்புரையுடன்: கி. பி. 1905 - 1934.
() திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருத்தொண்டர் மாக்கதை, குலசை . இராமநாதபிள்ளை அவர்கள் வரலாற்றுக் குறிப்புரைகளுடனும், திருப்பக்கிழார் திரு. சு. . இராமசாமிப் புலவர் அவர்களின் விளக்கக் குறிப்புரைகளுடனும் - கி. பி. 1970.
() திரு. வி. . அவர்களின் பதிப்பில் திரு. . . ஞானசம் பந்தன் அவர்கள் செய்த சில திருத்தங்களுடன் - கி. பி. 1993.
12.5.3. உரை நிறைவு பெறாத பதிப்புக்கள்:
() மழவை மகாலிங்க ஐயர் உரை: (ஆனாயர் வரை) முதற் பதிப்பு - கி. பி. 1845 (காரைக்கால் அம்மையார் வரை) - கி. பி. 1846.
() அருள்திரு. ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள் (ஏயர்கோன் கலிக்காமர் வரை) பதிப்பு - கி. பி. 1885.
() திரு. ஆலாலசுந்தரம் பிள்ளை உரைப் பதிப்பு - 1. அமர்நீதி யார் சருக்கம் வரை - கி. பி. 1918; 2. இலைமலிந்த சருக்கம் மட்டும் - கி. பி. 1923; 3. நூல் தொடக்கம் முதல் ஆனாய நாயனார் முடிய - கி. பி. 1924.
() திரு.ி. வா. ஜகந்நாதன் அவர்கள் எழுதிய பெரியபுராண விளக்கம் என்ற பெயரில் அல்லயன்ஸ் கம்பெனியார் பதிப்புக்கள் - 2105 பாடல்கள் வரை) 1987முதல் 1991 வரை.
12.5.4 உரை நிறைவு பெற்ற பதிப்புக்கள்:
() திரு.ி. சுப்பராய பிள்ளை அவர்கள் உரையுடன் முதற் பகுதி - கி. பி. 1893; இரண்டாம் பகுதி - கி. பி. 1895.
() சிவத்திரு. சிவக்கவிமணி சி.. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் உரையுடன் - பகுதி பகுதியாக நூல் முழுமையும் வெளிவந்த ஆண்டுகள் - கி. பி. 1937 முதல் 1968 வரை.
() ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் எழுதிய உரையைத் தொடர்ந்து, எஞ்சிய பகுதிக்கும் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் உரை நிறைவு செய்து வெளியிட்ட பதிப்பு - கி. பி. 1898.
() சென்னை, வர்த்தமானன் பதிப்பு, பொழிப்புரையுடன் - கி. பி. 1990.
இவ்வகையில், தொடர்ந்து பெரியபுராணத்தைத் தமிழ்ச் சைவ உலகிற்குப் பதிப்பித்து வழங்கிய அறிஞர் பெருமக்கள் அனைவர்க்கும் அடியவனின் நன்றியும் வணக்கமும் என்றென்றும் உரியனவாகும்.
இப்பதிப்புக்களில், சிவக்கவிமணி அவர்களின் பதிப்பு, பாட் டின் உட்பொருள் அன்றியும், ஆண்டைக்கு இன்றியமையா யாவை யும் விளங்கத் தன்னுரையானும் பிறநூலானும் ஐயம் அகல ஐங்காண் டிகை உறுப்பொடு மெய்யினை எஞ்சாது இசைக்கும் விருத்தியுரை யாய பதிப்பாகும். அப்பெருமகனாருக்குச் சிறப்புவகையானும் அடிய வனின் வணக்கத்தைதயும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளும் கடப்பாடுடையேன்.
பன்னிரு திருமுறைகளும் தக்க உரை விளக்கங்களுடன் தம் அருளாட்சிக் காலத்தில் நிறைவாக வரவேண்டும் எனத் திருவுளங் கொண்டு, திருவருளால் அவ்வரிய பணியை நிறைவு செய்தருளி யிருக்கும் தருமை ஆதீனம் 26ஆவது குருமூர்த்திகளாக விளங்கும் ஷ்ரீலஷ்ரீ குருமகாசந்நிதானம் அவர்கள் பல்லாற்றானும் போற்றி வணங்குதற்குரியவர்களாவார்கள். சிவனடியே சிந்திக்கும் திருவுள்ள மும், பதிகச் செஞ்சொல் மேய செவ்வாயும், நாளும் தாம் வழிபட்டு வரும் சொக்கநாதப் பெருமானைப் பூசனை செய்துவரும் திருக்கரங் களும் உடையவர்கள். அவர்கள் அடியவனை ஆட்கொண்டருளித் தொடர்ந்து பல்வேறு சிவப் பணிகளைச் செய்து உய்யுமாறு பணித் தருளி வருபவர்கள். அவர்கள் இத்திருத்தொண்டர் புராண உரைப் பணியை அடியவனிடத்து வழங்கி ஆட்கொண்டருளிய பெருங்கரு ணைக்கு அடியேன் என்றென்றும் போற்றி வணங்கிவரும் கடப்பாடு டையேன். அவர்களின் திருவடி மலர்களை வணங்கி மகிழ்கின்றேன்.
இஃது, உரைநிறைவுற்ற பதிப்புக்களில், ஆறாவது பதிப்பாக விளங்குகின்றது. இதற்குமுன் பதிப்பித்த பெருமக்கள் அனைவர்க்கும் மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வுரைப் பதிப்பு நிறைவு பெறுதற்கு ஏதுவாகப் பொருள் உதவிய அன்பர்கள் அனைவர்க்கும் சிறப்பாக இப்பன்னிரண்டாம் திருமுறைப் பதிப்புக்கு உதவிய அருட்செல்வர் திரு எம். . சிதம்பரம் அவர்களுக்கும் திரு. . சி. முத்தையா அவர்களுக்கும், உடனிருந்து எழுதுதற்கும், திருத்துதற்கும் உதவிய அறிஞர் பெருமக்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.