vanakkam

vvvv

இணையமலர் செய்திகள்

Sunday, February 6, 2011

அறிக்கையில்' நிரம்பிய கண்மாய்கள்:கால்நடைகள் மேயும் ஆச்சரியம்

திருப்பாச்சேத்தி:அதிகாரிகள் நிரம்பியதாக அறிக்கை கொடுத்த மழவராயனேந்தல், செம்பராயனேந்தல் கண்மாய்களில், புதர் மண்டி கால்நடைகள் மேய்கின்றன. பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள இவற்றிக்கு, வைகை வலது பிரதான கால்வாயில் இருந்து வரத்துக்கால்வாய் உள்ளது. இப்பகுதியில் கனமழை பெய்தும் இதுவரை தண்ணீர் வரவில்லை. இக்கண்மாய்கள் நிரம்பியதாக வருவாய், பொதுப்பணி அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். திருப்புவனம் ஒன்றியத்தில் பொதுப்பணித்துறையின் 55 கண்மாய்களில், 90 சதவீதம் நிரம்பியதாக அறிக்கை அனுப்பியுள்ளனர். மழவராயனேந்தல், செம்பராயனேந்தல் கண்மாய் மூலம் 600 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஆனால் இவை நிரம்பி 23 ஆண்டுகள் ஆகிவிட்டன; வைகை ஆற்றில் அதிகளவில் மணல் அள்ளியதால் கண்மாய்களுக்கு நீர் வரவில்லை என, விவசாயிகள் குமுறுகின்றனர்.
விவசாயிகள் சொல்வது என்ன?:அய்யப்பன்: கண்மாய் நிரம்பியதாக, அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கூறி, வைகை தண்ணீர் திறந்து விட மறுக்கின்றனர். ஒவ்வொரு முறையும் தண்ணீர் விடுவதாக கூறி கண்ணீர் விட வைக்கின்றனர்.ராஜசேகரன்: பொதுப்பணி அதிகாரிகளிடம் பல முறை கூறியும் நடவடிக்கை இல்லை. மெத்தனமாக பதில் கூறுகின்றனர். கண்மாய் நிரம்பியதாக பொய்யான தகவல் கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்குபோக்கு கூறி தண்ணீர் திறந்து விடுவதில், பாரபட்சம் காட்டுகின்றனர்.

நன்றி:தினமலர் 

No comments:

Post a Comment