vanakkam

vvvv

இணையமலர் செய்திகள்

Sunday, February 6, 2011

நாவலரும் பைபிளும்

றுமுகநாவலர் தனது பன்னிரண்டாவது வயதில் தமிழ்க் கல்வியை முடித்துக்கொண்டு ஆங்கிலக் கல்விக்காக யாழ்ப்பாணம் மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் சேர்ந்தார். ஆங்கில மொழி அறிவையும் அவட் மிக விரைவிலேயே பெற்றுக் கொண்டார். அதனால் அப்பாடசாலையிலேயே முதல்வராய் இருந்த சங்கைக்குரிய பீட்டர் பேர்சிவல் என்பவர் நாவலரைக் கீழ் வகுப்புகளில் ஆங்கிலமும் மேல் வகுப்புகளில் தமிழும் கற்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இங்ஙனமாக அவருடைய பத்தொன்பதாவது வயதிலே விவிலிய நூலை மொழி பெயர்க்கும் பணியையும் நாவரிடம் ஒப்படைத்தார் பாதிரியார். தமது சமய அநுட்டானங்களைச் செய்வதிலும் சைவசமய பிரசார வேலைகளிலும் ஏனைய மதங்களைக் கண்டித்துப் பேசுவதிலும் தனக்குச் சுதந்திரம் அளிக்கப்படவேண்டும் என்ற நிபந்தனையுடன் அந்த மொழிபெயர்ப்பு வேலையை நாவலர் ப்புக் கொண்டார். நாவலரையன்றி வேறெவரும் இப்பணியைத் திறம்படச் செய்யமாட்டார்கள் என்பதை அறிந்த சங்கைக்குரிய அப்பெரியவரும் நாவலருடைய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டார்.
பைபிள் மொழிபெயர்ப்பிலே முதனூலின் உண்மைச் சொரூபத்தையும் அதன் தத்துவக் கோட்பாடுகளையும் மொழிபெயர்ப்பிலும் பிரதிபலிக்கச் செய்யவேண்டுமென்று நாவலர் அந்நூலுக்குரிய வியாகியானங்களையும் அதனோடு தொடர்புடைய ஏனைய நூல்களையும் படிக்க வேண்டியிருந்தது. இம்மொழிபெயர்ப்பு வேலை முடிந்ததும் பேர்சிவல் பாதிரியார் நாவலரை அழைத்துக் கொண்டு சென்னைக்குச் சென்றார். அங்கே யாழ்ப்பாணத் தமிழரைத் துரும்பாகப் பார்க்கிறார்கள். அங்கேயும் பண்டிதர் குழுவொன்று பைபிளை மொழிபெயர்த்து வைத்திருந்தது. எனவே இரு மொழிபெயர்ப்புகளும் ஒப்பு நோக்கப்பட்டன. அப்பொழுது பல இடங்களில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. எனவே இவ்விரண்டு மொழிபெயர்ப்புகளுள்ளும் சிறந்தது எது என்பதைத் தேர்ந்தெடுக்குமாறு சென்னையிலிருந்த  அறிஞர் மழவை மகாலிங்கய்யர் அவர்களிடம் அவை ஒப்படைக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தமிழே  சிறந்தது என்று  மகாலிங்கையர் சான்று வழங்கியதோடு மொழிபெயர்த்தவருடைய புலமையையும் கிலாகித்துப் பாராட்டினார். மிஷனும் நாவலருடைய மொழிபெயர்ப்பையே ஏற்று பிரசுரஞ் செய்தது.
விவிலியத்தை மதம் சார்ந்த நூலாகப் பார்ப்பது பின்னர் தான் தொடங்கி இருக்கும் போல் இருக்கிறது.
இம்மொழிபெயர்ப்பு வேலையில் ஈடுபட்டதனால் நாவலர் கிறிஸ்துவமதக் கோட்பாடுகளையும் நன்கு தெரிந்து கொண்டார். பின்னால் சைவ சமயப் பிரசாரகராக அவர் ஆற்றிய பணிக்கு இது பெரிதும் பயனளித்தது.

No comments:

Post a Comment